27 அக்டோபர் 2011

நாட்டை மீட்டெடுத்த எனக்கு கற்களாலும் தாக்குகின்றனர் என்கிறார் மகிந்த ராஜபக்ஸ.

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்திமிக்க நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனக்கு மலர்மாலைகள் விழுவதைப் போன்று கற்களால் தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை தூதுவராலயம் மற்றும் அந்நாட்டில் இருக்கின்ற இலங்கை கலாசார அமைப்புகள் 7 இணைந்து ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் ஜனாதிபதி நேற்று மாலை கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பு மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழக வின்துரோப் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கையின் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்துகொண்டார். இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமைக்காக இந்நிகழ்வில் அவர்கள் ஜனாதிப திக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்தனர்.
புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் முன்னெடுக்கப்படும் பொய்யான பிரசாங்களுக்கு எதிராக செயற் படுவதாகவும் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இங்கு ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாதத்தை ஒழித்த ஒரே நாடு என்பதனால்தான் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் எமக்கு வழங்கிய ஆதரவிற்கு இத்தருணத்தில் நன்றி கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
சிங்கள பெயரை கொண்டிருக்கின்ற பிள்ளைகளுக்கு சிங்களம் கற்பிப்பது மிகவும் இன்றியமையாததாகும். தமிழ் பிள்ளைகள் தமிழ் மொழியை கற்பது முக்கியமானதாகும். எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எங்களுடைய கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும் என்றார். புலிகளுக்கு எதிராக மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏன்? ஏற்பட்டது என்பது தொடர்பிலும் ஜனாதிபதி இங்கு தெளிவுபடுத்தினார் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக