
தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவந்த மனோ கணேசன் மற்றும் விக்ரமபாகு கருணாரத்ன ஆகியோருக்கு ஆதரவளிப்பது தமிழ் மக்களின் தார்மீகக் கடமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவர்களுக்கு ஆதரவளிப்பது பற்றிய தமது அறிவிப்பு தாமதமாகவே வந்தாலும் அது சரியான நேரத்தில் வந்திருக்கிறது என்று கூறிய செல்வம் அடைக்கலநாதன், தாம் களத்தில் இதுவரை பணியாற்றிவந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் கோரிக்கைகள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவே தாம் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக