02 அக்டோபர் 2011

சவேந்திர சில்வாவிற்கு இராஜதந்திர வரப்பிரசாதம் உள்ளதா என ஐ.நாவிடம் ஸ்ரீலங்கா கேள்வி!

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி நிரந்தரதப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு இராஜதந்திர வரப்பிரசாதம் காணப்படுகின்றதா என இலங்கை அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இராஜதந்திரியாக மாறியுள்ள முன்னாள் மேஜர் ஜெனரலுக்கு இராஜதந்திர வரப்பிரசாதங்கள் காணப்படுகின்றனவா என அரசாங்கம், ஐக்கிய நாடுகளிடம் வினவியுள்ளது.
சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்க சட்டங்களுக்கு அமைய சவேந்திர சில்வாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வியன்ன பிரகடனத்தின் அடிப்படையில் சவேந்திர சில்வாவிற்கு இராஜதந்திர வரப்பிரசாதங்கள் காணப்படுவதாகவும் இதனால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது எனவும் அரசாங்கம் அறிவித்து வந்தது.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறெனினும், சவேந்திர சில்வா இராஜதந்திர வரப்பிரசாதங்களை உடையவரா என்பதனை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களமே தீர்மானம் செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக