
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். சிவில் பாதுகாப்பு அலுவலகத்தில் நடைபெற்ற ஆண்டு ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பேசிய முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, பிள்ளை தங்களது கால்களிலோ அல்லது கோயிலிலோ விழுந்து வணங்குவது கிடையாது என அந்த மாணவனின் பெற்றோர் கூறியதாக சில பத்திரிகைகள் எழுதியிருந்தன. பத்திரிகைகள் தவறான, பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களின் சிந்தனைகளில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவ்வாறான தகவல்களை வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ளவேண்டும். சரியான தகவல்களை உறுதிப்படுத்தி வெளியிடவேண்டும்.
தமது பிள்ளை கோயிலில் கூட விழுந்து வணங்குவதில்லை எனத் தாங்கள் குறிப் பிடவில்லை எனச் சேதுராகவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.எமது கல்வித் தரம் இன்று உயர்ந்துள்ளதைக் கண்டு உலகம் வியக்கிறது. அது மேன் மேலும் உயரவேண்டும். இதனைக் குழப்பாது எமது கல்வித் தரத்தை மேம்படுத்த உதவவேண்டும் என்றார் யோகேஸ்வரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக