சனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் திரையிடுவதற்கான முயற்சியில் மூன்று சர்வதேச மனித நேய அமைப்புகளினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பொதுமன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிக்கான குழு, மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியன ஒன்றிணைந்து ஐ. நாடாளுன்றில் திரையிடுவதற்கான முழுமையான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றத்திற்கு எதிரான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்து சர்வதேச நாடுகள் ஓரணியில் நின்று செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவுஸ்ரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் நாடுகளிடையே சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் திரையிடப்பட்டு வருகிற வேளையில் ஐரோப்பிய நாடாளுமன்றில் திரையிடப்படுவது சிறீலங்கா அரசுக்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
மனிதாபிமான நடவடிக்கையின் போது பொதுமக்கள் இழப்பு பூச்சியம் என சிறீலங்காவினால் தெரிவிக்கப்படும் கருத்துக்கு நேர்எதிர் மறையாக ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படம் ஆதாரமாக உள்ளது.
பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் நாடாளுமன்றத்தில் ஒளிபரப்பாகிய ஆவணப்படத்தினால் சிறீலங்கா பிரதிநிதிகள் கடந்த மாதம் இடம்பெற்ற 66 ஆவது மனித உரிமை பேரையில் பெரும் தடுமாற்றத்தை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக