18 நவம்பர் 2018

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நிதியை நிறுத்தியது!

Image result for சர்வதேச நாணய நிதியம்இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து, நிதிய உதவிகளை நிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியம், இலங்கையுடன் மேற்கொண்டு வரும் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளதாக நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியான நிலைமை முடிவடைந்து விட்டது என்பது தெளிவாகும் வரை திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் அதிகரித்து வரும் நிலைமைகளை கண்காணித்து வருவதாக இதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.சர்வதேச நாணய நிதியம் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்களை வழங்குவதற்காக அனுமதியை வழங்கியதுடன், அதில் தவணை கொடுப்பனவை வழங்க ஏற்பாடுகளை செய்திருந்தது.
முக்கியமான பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டும் என நிபந்தனைகளின் அடிப்படையில், இந்த நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணங்கியிருந்தது.எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் வரி சீர்த்திருத்தங்கள் அந்த நிபந்தனைகளில் அடங்கியிருந்தன. இதற்கு அமைய எரிபொருள் விலை சூத்திரத்தை முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிமுகப்படுத்தியிருந்தார்.

09 நவம்பர் 2018

சிறீலங்கா நாடாளுமன்றம் கலைப்பு!

மைத்திரிபால சிறிசேனஇலங்கை நாடாளுமன்றத்தை இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவுடன் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாக அரசாங்கத்தின் பதில் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கடந்த 26ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தையும் நவம்பர் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் போதிய எம்பிக்களின் ஆதரவை பெற மகிந்த தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவை மகிந்த தரப்புக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தன.
அரசில் நேரெதிர் துருவங்களான தமிழ் தேசிய கூட்டணி, ஜனதா விமுக்தி பெரமுன ஆகியவற்றின் தலைவர்கள் சந்தித்து பேசியதுடன் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒத்துழைக்கப் போவதாகவும் அறிவித்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவில்லை.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.