உதியமரம் பெருத்தாலும் உத்தரத்துக்கு உதவாது என்றும் கல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை என கருணாநிதி கூறியது தற்போது அக்கட்சிக்கே திரும்பி விட்டது என்றும் திமுக வெற்றியை நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் இந்த வெற்றியால் திமுகவுக்கு சந்தோஷம் இல்லை என்றே கூறப்படுகிறது. மத்தியில் திமுக நினைத்தது நடக்கவில்லை. அது போல் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்பார்த்து ஏமார்ந்ததுதான் மிச்சம். இதுகுறித்து நமது அம்மா நாளிதழில் தலையங்கத்தில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.அதில் கூறுகையில் திமுக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் இந்த உதியமரம் பெருத்தாலும் உத்திரத்துக்கு உதவாது. முருங்கைமரம் முற்றினாலும் முட்டுக் கொடுக்க ஆகாது எனும் கதைதான். அதிகப்பட்சம் என்ன நடக்கும். மது ஆலைகளை விஸ்தரிக்க மகாபிரபு டிஆர் பாலு பாடுவார்.மருத்துவக் கல்லூரி வளர்ச்சிக்கு ஜெகத்ரட்சகன் போராடுவார். ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கிலிருந்து தலை தப்பித்தால் போதும் என கனிமொழியும் ராசாவும் கடுமையாக உழைப்பார்கள். பிஎஸ்என்எல் முறைகேட்டு வழக்கில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற தயாநிதி திட்டமிடுவார். இப்படிதான் இந்த முப்பத்தெட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னெடுப்புகள் இருக்கும்.ஒன்றும் மட்டும் நிச்சயம். நாடாளுமன்றக் கேண்டீனில் பஜ்ஜி, வடை வியாவாரம் திமுகவால் படுஜோராய் நடக்கும். அதிலும் ஓசி பிரியாணி அரங்கேற்றம் நடக்காமல் இருந்தால் சரி. அதுவன்றி வேறு பயனேதும் தமிழகத்திற்கு சத்தியமாய் இருக்காது.கல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை என்று 2014-ஆம் ஆண்டு கழகத்தின் சார்பில் தனித்து நின்று 37 பேர் வெற்றி பெற்றபோது கருணாநிதி செய்திட்ட விமர்சனம் இப்போது பூமராங் ஆகி அவரது கட்சிக்கே அன்னாரது பொன்மொழி புண் மொழியாகியிருக்கிறது என நமது அம்மாவில் விமர்சனம் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக