23 ஏப்ரல் 2019

எனது பேத்தியின் தலையில் கைவைத்து விட்டு உள்ளே சென்றார் குண்டுதாரி!


நீர்கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த நிலையில் குண்டுடன் வெடித்தவரை நேரில் பார்த்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் திலீப் பெர்ணாண்டோ (66) மற்றும் அவர் குடும்பத்தார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
நீர்கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த நிலையில் குண்டுடன் வெடித்தவரை நேரில் பார்த்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் திலீப் பெர்ணாண்டோ (66) மற்றும் அவர் குடும்பத்தார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.இது குறித்து திலீப் கூறுகையில், குண்டு வெடிப்புக்கு முன்னர் காலை 7.30 மணிக்கு எனது மனைவி மற்றும் குடும்பத்துடன் செண். செபஸ்டின் தேவாலயத்துக்கு வந்தேன். அப்போது அங்கு கூட்டமாக இருந்ததால் வேறு தேவாலயத்துக்கு செல்ல நானும் என் மனைவியும் முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பினோம். என்னுடைய இரண்டு பேத்திகள் உட்பட என் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தேவாலயத்தின் வாசலிலேயே நின்றிருந்தனர்.அப்போது 30 வயதான இளைஞர் ஒருவர் கையில் கனமான பையுடன் வந்துள்ளார். பின்னர் என் பேத்தியின் தலையில் கை வைத்து விட்டு தேவாலயத்தின் உள்ளே சென்றார், அவர் தான் வெடிகுண்டோடு வந்த நபர் என கூறியுள்ளார். அவரை பார்க்க அப்பாவியாக இருந்தது, அவர் எந்த வித பயமும், பதட்டமும் இன்றி நிதானமாகவே காணப்பட்டார். அவர் உள்ளே சென்றவுடன் வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. பின்னர் என் குடும்பத்தார் அங்கிருந்து பதறியடித்து கொண்டு ஓடினார்கள். இப்படி தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக