வாரிசு அரசியலை ஒழிப்போம் என கூறும் மோடி வாக்கு சேகரிக்க தேனிக்கு வந்ததே ஒரு வாரிசுக்குத்தான் என்பதை மறந்துவிட்டார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் அனல் கக்க வைக்கின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் 40 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூடான பிரசாரத்தை செய்து வருகிறார்.இந்நிலையில் வடசென்னை வேட்பாளர் காளியம்மாளுக்கு ஆதரவாக சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது ராயபுரம் பகுதியில் அவர் பேசினார்.அவர் பேசுகையில் ஊழலுக்கான முதல் விதை எது தெரியுமா அது ஓட்டுக்கு பணம் கொடுப்பதுதான். நாங்கள் அரசியல் அமைப்பு சரியில்லை என்று கூறி வருகிறோம். ஆனால் சிலரோ சிஸ்டம் சரியில்லை என்று கூறி வருகின்றனர்.வீட்டுக்கு வீடு மழை நீரை சேகரிக்க மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த சொல்லும் அரசு இதுவரை மக்களுக்காக எதையும் சேர்த்து வைத்ததில்லை. ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் பிரச்சாரக் கூட்டங்களிலும் ஊழலை ஒழிப்போம் என கூறும் அரசியல் கட்சிகள், இதையே பல காலமாக சொல்லி வருகிறார்கள் மத்தியில் 50 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் 5 ஆண்டு ஆட்சி செய்த பாஜகவும் இதுவரை தாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு மக்களிடம் சொல்ல முடியுமா? கல்வியும் மருத்துவமனையும் ஏழைகளுக்கு ஒன்று , பணக்காரர்களுக்கு வேறு என உள்ளது.இதை மாற்ற வேண்டும். மோடி நேற்று தேனியில் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று பேசினார். ஆனால் தேனியில் அவர் வாக்கு கேட்க வந்ததே ஒரு வாரிசுக்குத்தான் (ஓபிஎஸ் மகன்) என்பதை அவர் மறந்துவிட்டார் போலும் என சீமான் விமர்சனம் செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக