
31 ஜூலை 2018
எழுந்து வா தலைவா என கோஷமிட்டவர்களிடம் ஐயா வந்துடுவாரா எனக்கேட்டவர் மீது தாக்குதல்!

28 ஜூலை 2018
தா.பாண்டியன் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக இருந்தவர் தா.பாண்டியன். முதுபெரும் கம்யூனிச தலைவர்களில் ஒருவர். அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
85 வயதான தா.பாண்டியன் சமீப காலமாக சிறுநீரக பிரச்சினை தொடர்பாக டயாலிசிஸ் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அராலியில் குள்ள மனிதர்கள் அட்டகாசம்,மக்கள் பீதி!

பதற்றம் நிலவியது.நேற்று இரவு அராலி, ஐயனார் ஆலயத்தைச் சூழவுள்ள பகுதிகளில் இந்தக் குள்ள மனிதர்களின் தாக்குதல் இடம்பெற்றதாகக்
கூறப்படுகின்றது. அராலியில் உள்ள அதிகமான வீடுகள் மீது நேற்றிரவு கல் வீசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கல் எறிந்துவிட்டு மரத்துக்கு மரம் தாவியும் ஒடியும் மறையும் குள்ளர்களைத் தேடி ஊரவர்கள் திரண்டனர். இதனால் அந்த இடம் பதற்றக் களமானது. மக்களை அச்சுறுத்துவதற்காக திட்டமிட்டு இவ்வான சம்பவங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்று இளைஞர்கள்
தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு தகவல் வழங்கப்பட்டது. அவர் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தார். நிலமைகளை அறிந்து வட்டுக் கோட்டைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
இரவு 8.30 மணியளவில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த சில தினங்களாகவே வீடுகள் மீது கல்வீச்சு நடப்பதாக மக்கள் முறையிட்டனர். குள்ளர்கள் வீடுகளின் கூரைகளில் தாவுவதால் வீட்டில் உள்ள பெண்கள், சிறுவர்கள் பயத்துடனேயே வாழ்கின்றனர் என்றனர். வீட்டுக் கூரையில் ஏதோ ஒன்று விழுவது போன்று சத்தம் கேட்டு வெளியில் வந்தால் குள்ள மனிதர்களை ஒத்தவர்கள் கூரையில் இருந்து மதிலுக்குப் பாய்ந்து மதிலில் இருந்து வீதிக்குப் பாய்ந்து சில நொடிகளில் தப்பித்துச் சென்று விடுகின்றனர் என்றும் மக்கள் தெரிவித்தனர்.
அண்மையில் பொதுமக்கள் அவர்களைத் துரத்திச் சென்றனர். அவர்கள் அராலித் துறை நோக்கி ஓடித் தப்பினர். நேற்று முன்தினம் கடலுக்குச் சென்று வந்த ஒருவரை மடக்கிய குள்ள மனிதர்கள், அவரை விசாரித்துள்ளனர். இதனால் அவர் பயத்தில் உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. மிகவும் குள்ளமாக இருக்கும் அவர்கள் கைக் கோடரியையும் வைத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிலருக்கு கைக் கோடரியைக் காட்டிப் பயமுறுத்தியுள்ளனர். எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுங்கள் என்று மக்கள் பொலிஸாரை கேட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனிடமும் அந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பான கூட்டமொன்று இன்று மாலை 5 மணிக்கு அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்தில் பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பொலிஸார், மற்றும் கிராம மக்களைக் கலந்துகொள்ளுமாறு மூத்தவர்கள் வேண்டுகோள்விடுத்தனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டனர்.
24 ஜூலை 2018
நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்திக் விடுதலை!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)