நீர்கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த நிலையில் குண்டுடன் வெடித்தவரை நேரில் பார்த்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் திலீப் பெர்ணாண்டோ (66) மற்றும் அவர் குடும்பத்தார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.இது குறித்து திலீப் கூறுகையில், குண்டு வெடிப்புக்கு முன்னர் காலை 7.30 மணிக்கு எனது மனைவி மற்றும் குடும்பத்துடன் செண். செபஸ்டின் தேவாலயத்துக்கு வந்தேன். அப்போது அங்கு கூட்டமாக இருந்ததால் வேறு தேவாலயத்துக்கு செல்ல நானும் என் மனைவியும் முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பினோம். என்னுடைய இரண்டு பேத்திகள் உட்பட என் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தேவாலயத்தின் வாசலிலேயே நின்றிருந்தனர்.அப்போது 30 வயதான இளைஞர் ஒருவர் கையில் கனமான பையுடன் வந்துள்ளார். பின்னர் என் பேத்தியின் தலையில் கை வைத்து விட்டு தேவாலயத்தின் உள்ளே சென்றார், அவர் தான் வெடிகுண்டோடு வந்த நபர் என கூறியுள்ளார். அவரை பார்க்க அப்பாவியாக இருந்தது, அவர் எந்த வித பயமும், பதட்டமும் இன்றி நிதானமாகவே காணப்பட்டார். அவர் உள்ளே சென்றவுடன் வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. பின்னர் என் குடும்பத்தார் அங்கிருந்து பதறியடித்து கொண்டு ஓடினார்கள். இப்படி தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என கூறியுள்ளார்.23 ஏப்ரல் 2019
எனது பேத்தியின் தலையில் கைவைத்து விட்டு உள்ளே சென்றார் குண்டுதாரி!
நீர்கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த நிலையில் குண்டுடன் வெடித்தவரை நேரில் பார்த்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் திலீப் பெர்ணாண்டோ (66) மற்றும் அவர் குடும்பத்தார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.இது குறித்து திலீப் கூறுகையில், குண்டு வெடிப்புக்கு முன்னர் காலை 7.30 மணிக்கு எனது மனைவி மற்றும் குடும்பத்துடன் செண். செபஸ்டின் தேவாலயத்துக்கு வந்தேன். அப்போது அங்கு கூட்டமாக இருந்ததால் வேறு தேவாலயத்துக்கு செல்ல நானும் என் மனைவியும் முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பினோம். என்னுடைய இரண்டு பேத்திகள் உட்பட என் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தேவாலயத்தின் வாசலிலேயே நின்றிருந்தனர்.அப்போது 30 வயதான இளைஞர் ஒருவர் கையில் கனமான பையுடன் வந்துள்ளார். பின்னர் என் பேத்தியின் தலையில் கை வைத்து விட்டு தேவாலயத்தின் உள்ளே சென்றார், அவர் தான் வெடிகுண்டோடு வந்த நபர் என கூறியுள்ளார். அவரை பார்க்க அப்பாவியாக இருந்தது, அவர் எந்த வித பயமும், பதட்டமும் இன்றி நிதானமாகவே காணப்பட்டார். அவர் உள்ளே சென்றவுடன் வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. பின்னர் என் குடும்பத்தார் அங்கிருந்து பதறியடித்து கொண்டு ஓடினார்கள். இப்படி தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என கூறியுள்ளார்.14 ஏப்ரல் 2019
மோடி வாக்கு சேகரிக்க வந்ததே ஒரு வாரிசுக்காகத்தான்!
வாரிசு அரசியலை ஒழிப்போம் என கூறும் மோடி வாக்கு சேகரிக்க தேனிக்கு வந்ததே ஒரு வாரிசுக்குத்தான் என்பதை மறந்துவிட்டார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் அனல் கக்க வைக்கின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் 40 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூடான பிரசாரத்தை செய்து வருகிறார்.இந்நிலையில் வடசென்னை வேட்பாளர் காளியம்மாளுக்கு ஆதரவாக சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது ராயபுரம் பகுதியில் அவர் பேசினார்.அவர் பேசுகையில் ஊழலுக்கான முதல் விதை எது தெரியுமா அது ஓட்டுக்கு பணம் கொடுப்பதுதான். நாங்கள் அரசியல் அமைப்பு சரியில்லை என்று கூறி வருகிறோம். ஆனால் சிலரோ சிஸ்டம் சரியில்லை என்று கூறி வருகின்றனர்.வீட்டுக்கு வீடு மழை நீரை சேகரிக்க மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த சொல்லும் அரசு இதுவரை மக்களுக்காக எதையும் சேர்த்து வைத்ததில்லை. ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் பிரச்சாரக் கூட்டங்களிலும் ஊழலை ஒழிப்போம் என கூறும் அரசியல் கட்சிகள், இதையே பல காலமாக சொல்லி வருகிறார்கள் மத்தியில் 50 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் 5 ஆண்டு ஆட்சி செய்த பாஜகவும் இதுவரை தாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு மக்களிடம் சொல்ல முடியுமா? கல்வியும் மருத்துவமனையும் ஏழைகளுக்கு ஒன்று , பணக்காரர்களுக்கு வேறு என உள்ளது.இதை மாற்ற வேண்டும். மோடி நேற்று தேனியில் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று பேசினார். ஆனால் தேனியில் அவர் வாக்கு கேட்க வந்ததே ஒரு வாரிசுக்குத்தான் (ஓபிஎஸ் மகன்) என்பதை அவர் மறந்துவிட்டார் போலும் என சீமான் விமர்சனம் செய்தார்.03 ஏப்ரல் 2019
இயக்குனர் மகேந்திரன் மறைவு!சீமான் அறிக்கை!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது,
நாடகங்களிலிருந்து அறிவியல் கண்டுபிடிப்பான திரை வடிவத்திற்கு கலை வடிவம் மாறுதல் பெற்றாலும் நாடகங்களின் இறுக்கமான கதைசொல்லல் முறைமையையும், நுட்பமான உணர்வுகள் அற்ற நடிப்பு முறைமையையும் திரைக் கலை கைவிடாமல் நாடகப் பாணியிலான திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில்..இயல்பான காட்சிகள், அசலான மனிதர்கள் , வியக்க வைக்கும் திரைக்கதை என தமிழ் திரையுலகிற்கு புது ரத்தம் பாய்ச்சிய மாமேதை மறைந்த இயக்குனர் மகேந்திரன் அவர்கள். அவருடைய உதிரிப்பூக்கள் உலகத் திரைப்பட வரிசைக்கு தமிழ் திரை உலகின் மறக்கமுடியாத பூங்கொத்து. புகழ்பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்கின்ற சிறு நாவலை தழுவி உருவாக்கப்பட்ட உதிரிப்பூக்கள் திரைப்படக் கலையை பயில விரும்பும் மாணவர்களுக்கு முதன்மைப் பாடமாக இன்னுமும் திகழ்கிறது. அதேபோல இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் உச்ச நட்சத்திரம் திரு ரஜினிகாந்த் அவர்கள் நடித்த முள்ளும் மலரும் தமிழ் திரையுலகின் மறக்க முடியாத மாபெரும் படைப்பாக திகழ்ந்து வருகிறது. காட்சிகளின் இடையே நிகழுகின்ற வேதியியல் மாற்றத்தை சரியாகப் புரிந்துகொண்டு உயிரோட்டமாக ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் இயக்குனர் மகேந்திரன் ஒரு மாமேதை.
கதாபாத்திரங்களின் நுட்பமான உணர்வுகளை, மென்மையான காட்சிகள் மூலம் அழகாக திரையில் வடித்தெடுப்பதில் அவருக்கு இணையானவர் இந்திய திரை உலகில் எவரும் இல்லை.
தனது இறுதி காலத்தில் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தேர்ந்த நடிகராகவும் நடித்து புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளர் . சிறந்த எழுத்தாளர். அவரின் கலைத் திறமையை கண்டு கவரப்பட்ட நம் தேசிய தலைவரும் என்னுயிர் அண்ணனும் ஆகிய மேதகு வே பிரபாகரன் அவர்கள் நேரில் சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்து இயக்குனர் மகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து திரைப்படக் கலை குறித்து விவாதித்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு.
தமிழ் தேசிய இனத்தின் ஆற்றல்மிக்க கலையாளராக தமிழ் திரை உலகின் மூத்த படைப்பாளியாக திகழ்ந்த இயக்குனர் மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் தமிழ் திரை உலகின் மாபெரும் இழப்பில் அவர்களோடு ஒருவனாக நானும் பங்கேற்கிறேன். மாமேதை இயக்குனர் மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் திரைக்கலையின் மகத்தான மகுடம் ஐயா இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)