முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கட்சிதாவலை ஊக்குவிக்கிறார் என குற்றஞ்சாட்டியுள்ள அரசாங்கம் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்கான பெரும் நாடகமொன்றின் ஒரு பகுதியாகவே இது இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த. சந்திரிகா குமாரதுங்கவின் நாடகத்தில் மைத்திரிபால சிறிசேன முக்கிய கதாபாத்திரத்தை வகிக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இதேவேளை இந்த முழு நாடகமும் மேற்குலக சதி என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டலஸ் அழகபெரும, இலங்கையின் உள்விவகாரங்களில் இராஜதந்திரிகளை தலையிடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். விடுதலைப் புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் சில நாடுகளும் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்காக நிதிவழங்குகின்றன எனவும் குற்றம்சாட்டியுள்ள அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகப் போட்டியிடுவது என்ற மைத்திரிபாலவின் முடிவு குறித்து தான் ஏமாற்றமடைந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக