யாழ்ப்பாண மாநகரசபையின் கடந்த நிர்வாகத்தில் ஈ.பி.டி.பி செய்த ஊழல்கள் தொடர்பாக, யாழ். மாநகர மேயர், விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஊழல் விசாரணைகளுக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஆதரவை வழங்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.“ஈ.பி.டி.பி, கடந்த காலங்களில் யாழ்.மாநகர சபையில், செய்த ஊழல் தொடர்பில் தற்போது ஆட்சிப் பீடம் ஏறியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விசாரணைகளை செய்ய வேண்டும். அதில் உள்ள உண்மைகளை கண்டறிய வேண்டும். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையும் விசாரணைகளை மேற்கொள்ளும். இவ்விடயத்தை விசாரணை செய்ய ஏற்கனவே வடக்கு மாகாண சபையினால் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக் குழு நடத்திய விசாரணைகளில் ஈ.பி.டி.பி கட்சியின் ஆட்சியில் யாழ்.மாநகர சபை நிர்வாகத்தில் ஊழல்கள் நடைபெற்று உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். எனவே தற்போது ஆட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஈ.பி.டி.பி கடந்த காலத்தில் செய்த ஊழல் தொடர்பில் முறையான விசாரணை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
29 மார்ச் 2018
26 மார்ச் 2018
பிரான்சில் தமிழ் மாணவி கடத்தப்பட்டுள்ளார்!
பிரான்ஸ் - பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் ஈழத்தமிழ் மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவியின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.குறித்த போராட்டமானது, Lycée Romain Rolland, 21 Av de Montmorency, 95190 Goussainville என்ற இடத்தில் நாளை மாலை ஐந்து மணிக்கு (உள்ளூர் நேரம்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.பொலிஸாரின் பாதுகாப்பு மற்றும் அனுமதியுடன் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த 20ம் திகதி பாடசாலைக்குச் செல்லும் போது கால் மற்றும் கைகளை கட்டியவாறு எனது மகள் கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன்.மகள் கடத்தப்பட்டு ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. என் மகள் இதுவரையிலும் என் கைகளில் கிடைக்கவில்லை. இந்நிலையில், அனைவரும் ஒன்று சேர்ந்து எனது மகளை மீட்டுதர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன.இது போன்ற சம்பவம் வேறு எந்த பிள்ளைக்கும் வரக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.இந்நிலையில், நாளை பொலிஸாரின் அனுமதியுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொண்டு தமக்கு ஒத்துழைக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும், இதுவரையில் மாணவி குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
“கடந்த 20ம் திகதி பாடசாலைக்குச் செல்லும் போது கால் மற்றும் கைகளை கட்டியவாறு எனது மகள் கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன்.மகள் கடத்தப்பட்டு ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. என் மகள் இதுவரையிலும் என் கைகளில் கிடைக்கவில்லை. இந்நிலையில், அனைவரும் ஒன்று சேர்ந்து எனது மகளை மீட்டுதர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன.இது போன்ற சம்பவம் வேறு எந்த பிள்ளைக்கும் வரக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.இந்நிலையில், நாளை பொலிஸாரின் அனுமதியுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொண்டு தமக்கு ஒத்துழைக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும், இதுவரையில் மாணவி குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
20 மார்ச் 2018
தமிழின உணர்வாளரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் காலமானார்!
சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் (வயது 75) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் நடராஜன். பின்னர் அரசு மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றினார். 1975-ம் ஆண்டு சசிகலாவை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.பின் 1980களில் ஜெயலலிதாவுடன் நட்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு பின்புலமாக, ஒருகட்டத்தில் ஆலோசகராகவும் இருந்து வந்தார் நடராஜன்.அண்மையில் அவருக்கு உடநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குளோபல் மருத்துவமனையில் கடந்த 16-ந் தேதியன்று தீவிர சிகிச்சைக்காக நடராஜன் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்தது.அவரது உடல் எம்பாமிங் செய்வதற்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எம்பாமிங் செய்த பின்னர் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வருகிறார். நடராஜன் இறப்பு சான்றிதழ் கொடுத்த பின்னர் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்படும்.
18 மார்ச் 2018
சிறீலங்கா எதையும் செய்து விடப்போவதில்லை என்ற புலம்பெயர் அமைப்பின் கூற்றுக்கு பொறுப்போம் என்கிறார் சிறீதரன்!
ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. கால அவகாசம் முடிவடைவதற்குஇன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில் அரசாங்கம் எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. இந்த கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்க ஜெனிவா வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை வௌ்ளிக்கிழமை ஜெனிவா வளாகத்தில் சந்தித்து பேச்சு நடத்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான மாணிக்கவாசகர் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.இந்த சந்திப்பின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிடுகையில், '2019 ஆம் ஆண்டுடன் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுக்கு வந்துவிடும். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யாத அரசாங்கம் எதிர்வரும் ஒரு வருட காலத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே அரசாங்கம் எதனையும் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது.அந்தவகையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுத்து அறிவிக்கவேண்டும். நாங்கள் இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதே என்று எம்மிடம் சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்புகின்றன. தற்போது இலங்கை விவகாரம் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்று புலம்பெயர் அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன. இவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமே தமிழர்கள் தீர்வைப் பெறலாம் என்றார்.இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிடும்போது 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஒரு வருடம் பொறுமைகாக்கவே விரும்புகின்றது . அதன் பின்னர் சர்வதேசத்துடன் இணைந்து எவ்வாறான திட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதனை ஆராய்வோம்.அத்துடன் இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்த வழிவகைகளை கூறவேண்டும். நாம் பொறுமை காக்கின்றோம். முடியாத பட்சத்தில் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவோம் என்றார்.
17 மார்ச் 2018
ஜெனிவா பிரேரணையை நிறைவேற்ற சிறீலங்கா எதனையும் செய்யவில்லை!
ஜெனிவாவில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் அலுவலகமும் பாதிக்கப்பட்ட மக்களை திருப்திப்படுத்துவதாக இல்லை என்று சமாதானத்திற்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் தலைவர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார்.ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை மனித உரிமை நிலை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்தில் உரையாற்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.யுத்தக்குற்றங்கள் மனதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற விடயங்களின் அடிப்படையிலேயே ஜகத் ஜயசூரிய மீது சர்வதேச நியாயாதிக்கம் பிரயோகிக்கப்பட்டது. இதேவேளை யுத்தத்தின்போது என்ன நடந் தது என்ற உண்மை கண்டறியப்படவேண்டும். அதனடிப்படையிலேயே தர்ஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவை அன்று பான்கீ மூன் நியமித்தார். நானும் அதில் அங்கத்துவம் பெற்றேன்.யுத்தக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயுமாறு எமது நிபுணர் குழுவிற்கு பணிக்கப்பட்டது. நாம் சிவிலியன்களின் உயிரிழப்பு தொடர்பாக ஆராய்ந்தோம். எமக்கு கிடைத்த தகவல்களின் படி 40 ஆயிரம் என்று கூறப்பட்டது. நாங்கள் தரவுகளை சேகரித்தோம். எமது பரிந்துரைக்கு அமைவாகவே முன்னாள் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் உள்ளக விசாரணை பொறிமுறை ஒன்றை இலங்கையின் யுத்தம் தொடர்பில் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் நாம் மதிப்பிட்ட எண்ணிக்கையை விட உயிரிழப்புக்கள் அதிகமாக இருக்கும் என கருதப்பட்டது. அது 75 ஆயிரமாக இருக்கும் என்றும் கருதப்பட்டது.நாங்கள் மத பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினோம். நாங்கள் சாட்சியாளர்களிடம் ஆதாரங்களைப் பெற்றோம். எமக்கு கிடைத்த முறையான தகவல்களின் பிரகாரமே எமது மதிப்பீட்டை வெளியிட்டோம்.இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அந்த பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, விசேட நீதிமன்றம், காணாமல்போனோர் அலுவலகம் என்பன குறித்து இந்த பிரேரணை வலியுறுத்துகின்றது. நட்டஈடு தொடர்பாகவும் இந்த பிரேரணை வலியுறுத்துகின்றது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இந்தப் பிரேரணையை அமுல்படுத்துவதில் ஏற்பட்டதாக தெரியவில்லை. அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் பல விடயங்களை அறிந்துகொள்ள முடியும். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை மட்டுமன்றி முழுநாட்டுக்கும் இந்த விடயத்தை தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். அதனால்தான் ஒரு நாட்டில் நிறுவன ரீதியான கட்டமைப்பில் இதனை செய்யவேண்டுமெனக் கூறப்படுகின்றது.இலங்கை அதிகமான காணாமல்போனோர்கள் தொடர்பான முறைப்பாடுகளை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக காணப்படுகின்றது. காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தை நியமித்தமையானது ஒரு சிறந்த நடவடிக்கை என்றே சர்வதேச சமூகம் பார்க்கின்றது. அதன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்றே சர்வதேச சமூகம் கருதுகின்றது. எனினும் வரைபில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையாத நிலைமையும் இருக்கின்றது. பலர் அது சரியான முறையில் இயங்காது என்று குறிப்பிடுகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.
16 மார்ச் 2018
இலங்கை குறித்து மாற்றுப்பொறி முறைக்கு ஆதரவு கோரப்படலாம் என நம்பப்படுகிறது!
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ளன. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கா மாற்று பொறிமுறையை முன்னெடுக்குமாறு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஏற்கனவே ஜெனிவா வளாகத்தில் நடைபெற்றுவரும் இலங்கை தொடர்பான உபகுழுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்த செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பான விடயத்தில் தாம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்பதாக கூறியிருந்தார். அந்தவகையில் இன்று நடைபெறும் விவாதம் மற்றும் எதிர்வரும் 21 ஆம்திகதி நடைபெறும் விவாதங்களின் போது இந்த மாற்றுப் பொறிமுறை தொடர்பில் செயிட் அல் ஹுசைன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.இலங்கையானது 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு நீடிக்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையை இலங்கை இதுவரை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்ற விடயத்தை செய்ட் அல் ஹுசைன் அதிருப்தியுடன் வெளிப்படுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.
14 மார்ச் 2018
இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் 76 வயதில் மரணம்!
இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தனது 76ஆவது வயதில் மரணமடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்த இவர், ’கருந்துளை மற்றும் சார்பியல்’ சார்ந்த பணிகளுக்கு புகழ்பெற்றவர்.
ஏ ஃப்ரீஃப் ஹிஸ்டிரி ஆஃப் டைம்`( A Brief History of Time) என்ற புத்தகம் உட்பட பல புகழ்பெற்ற அறிவியல் புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
"எங்களது அன்புமிக்க தந்தை இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்" என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தன்னுடைய 22ஆம் வயதில், மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும் `மோட்டார் நியூரான் நோய்` என்னும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது மேலும் அந்த நோயால் அவர் சில நாட்களே உயிருடன் வாழ்வார் என்றும் கூறினர்.அந்த நோயால் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது; மேலும் அவர் பேச முடியாத நிலைக்கும் போனார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருக்கும் அவரது இல்லத்தில் அவரின் உயிர் அமைதியாக பிரிந்தது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரின் பிள்ளைகளாகிய லூசி, ராபட் மற்றும் டிம்.
"ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி மேலும் அவரின் பணிகள் ஆண்டாண்டு காலம் நிலைத்திருக்கும்" என தெரிவித்துள்ளனர்
அவரின் மன தைரியம் மற்றும் உறுதியை புகழ்ந்த அவரின் பிள்ளைகள், அவரின் புத்திசாலித்தனமும், நகைச்சுவை உணர்வும் உலகளவில் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றும் தெரிவித்தனர்.நன்றி:பிபிசி தமிழ்.
பிரிட்டனை சேர்ந்த இவர், ’கருந்துளை மற்றும் சார்பியல்’ சார்ந்த பணிகளுக்கு புகழ்பெற்றவர்.
ஏ ஃப்ரீஃப் ஹிஸ்டிரி ஆஃப் டைம்`( A Brief History of Time) என்ற புத்தகம் உட்பட பல புகழ்பெற்ற அறிவியல் புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
"எங்களது அன்புமிக்க தந்தை இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்" என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தன்னுடைய 22ஆம் வயதில், மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும் `மோட்டார் நியூரான் நோய்` என்னும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது மேலும் அந்த நோயால் அவர் சில நாட்களே உயிருடன் வாழ்வார் என்றும் கூறினர்.அந்த நோயால் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது; மேலும் அவர் பேச முடியாத நிலைக்கும் போனார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருக்கும் அவரது இல்லத்தில் அவரின் உயிர் அமைதியாக பிரிந்தது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரின் பிள்ளைகளாகிய லூசி, ராபட் மற்றும் டிம்.
"ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி மேலும் அவரின் பணிகள் ஆண்டாண்டு காலம் நிலைத்திருக்கும்" என தெரிவித்துள்ளனர்
அவரின் மன தைரியம் மற்றும் உறுதியை புகழ்ந்த அவரின் பிள்ளைகள், அவரின் புத்திசாலித்தனமும், நகைச்சுவை உணர்வும் உலகளவில் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றும் தெரிவித்தனர்.நன்றி:பிபிசி தமிழ்.
01 மார்ச் 2018
தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் அனந்தி, அருந்தவபாலன், ஐங்கரநேசன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்திருந்த வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அனந்தி சசிதரன், பொ.ஐங்கரநேசன் மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோர் புதிதாக வருகை தந்திருந்தனர். இவர்கள் மூவரும், தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இன்று இணைக்கப்பட்டுள்ளனர்.இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சபை ஏற்றுக்கொண்டால் வருகைதந்த மூவரையும் மத்திய குழுவில் இணைத்துக்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார். இதனையடுத்து குழு உறுப்பினர்களின் முழு சம்மதத்துடன் மூவரும் மத்தியகுழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.ஈபிஆர்எல்எவ் சார்பில் தெரிவாகி அமைச்சராக பதவி வகித்த ஐங்கரநேசனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.இதேவேளை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள் க.அருந்தவபாலன் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராகச் செயற்பட்ட அனந்தி சசிதரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)