யாழ்ப்பாண மாநகரசபையின் கடந்த நிர்வாகத்தில் ஈ.பி.டி.பி செய்த ஊழல்கள் தொடர்பாக, யாழ். மாநகர மேயர், விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஊழல் விசாரணைகளுக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஆதரவை வழங்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.“ஈ.பி.டி.பி, கடந்த காலங்களில் யாழ்.மாநகர சபையில், செய்த ஊழல் தொடர்பில் தற்போது ஆட்சிப் பீடம் ஏறியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விசாரணைகளை செய்ய வேண்டும். அதில் உள்ள உண்மைகளை கண்டறிய வேண்டும். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையும் விசாரணைகளை மேற்கொள்ளும். இவ்விடயத்தை விசாரணை செய்ய ஏற்கனவே வடக்கு மாகாண சபையினால் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக் குழு நடத்திய விசாரணைகளில் ஈ.பி.டி.பி கட்சியின் ஆட்சியில் யாழ்.மாநகர சபை நிர்வாகத்தில் ஊழல்கள் நடைபெற்று உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். எனவே தற்போது ஆட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஈ.பி.டி.பி கடந்த காலத்தில் செய்த ஊழல் தொடர்பில் முறையான விசாரணை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.29 மார்ச் 2018
ஈபிடிபி யினரின் ஊழலை யாழ்,மேயர் விசாரிக்கவேண்டும்-விக்னேஸ்வரன்!
யாழ்ப்பாண மாநகரசபையின் கடந்த நிர்வாகத்தில் ஈ.பி.டி.பி செய்த ஊழல்கள் தொடர்பாக, யாழ். மாநகர மேயர், விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஊழல் விசாரணைகளுக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஆதரவை வழங்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.“ஈ.பி.டி.பி, கடந்த காலங்களில் யாழ்.மாநகர சபையில், செய்த ஊழல் தொடர்பில் தற்போது ஆட்சிப் பீடம் ஏறியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விசாரணைகளை செய்ய வேண்டும். அதில் உள்ள உண்மைகளை கண்டறிய வேண்டும். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையும் விசாரணைகளை மேற்கொள்ளும். இவ்விடயத்தை விசாரணை செய்ய ஏற்கனவே வடக்கு மாகாண சபையினால் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக் குழு நடத்திய விசாரணைகளில் ஈ.பி.டி.பி கட்சியின் ஆட்சியில் யாழ்.மாநகர சபை நிர்வாகத்தில் ஊழல்கள் நடைபெற்று உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். எனவே தற்போது ஆட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஈ.பி.டி.பி கடந்த காலத்தில் செய்த ஊழல் தொடர்பில் முறையான விசாரணை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக