02 ஏப்ரல் 2018

சுங்கச்சாவடி தகர்த்த சோழன்,வேல்முருகனுக்கு குவியும் வாழ்த்துகள்!

Velmurugan Arrested for Protesting at Ulundurpet Tollgate காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும்,போராட்டக்காரருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுங்கச்சாவடி அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இதனால் வேல்முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சமூக வலைத்தளங்களில் வேல்முருகனின் போராட்டத்திற்கு ஆதரவு வலுத்து வருகிறது.வேல்முருகனின் போராட்டத்திற்கு மக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆதரவாக பதிவிட்டுவருகிறார்கள். ஒரு ட்விட்டரில் பதிவில், போராட்டம் என்றால் இதுதான் போராட்டம்.. இது போன்ற போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க தமிழர்கள் முன் வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.தமிழர்கள் என்றால் மத்திய அரசு எப்போதும் கிள்ளுக்கீரையாக பார்க்கிறது. இதைத்தான் அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிட்டு இருக்கிறதா என்று இன்னொரு பதிவில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.தமிழகத்தின் பெரிய கட்சிகள் எல்லாம் வழக்கு, பின் விளைவுகள் என்று பயந்து கொண்டு இருக்கும்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் செய்திருப்பது தரமான சம்பவம் என்றும், வேல்முருகனுக்கு வாழ்த்துகளும் என்றும் ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இன்னொரு ட்விட்டரில் பதிவில், நீதி மறுப்பதும், நீர் மறுப்பதும் தான் வன்முறை. வரி மறுப்பது அல்ல ; எங்களுக்கு நீர் இல்லையென்றால் உங்களுக்கு வரி இல்லை என்று பதிவிடப்பட்டுள்ளது.இன்னொரு ட்விட்டர் பதிவில், அன்றைய சோழன் சுங்கம் தவிர்த்தான். இன்றைய சோழன் சுங்கம் தகர்த்தான் என்றும் வேல்முருகனைக் குறிப்பிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். வேல்முருகனின் இந்தப் போராட்டத்தால், சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவு பெருகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக