10 ஏப்ரல் 2018

புரட்சியாக உருவெடுத்த சேப்பாக்க போராட்டம்!

வெளிநாட்டு வீரர்கள் சென்னையில் நடக்கும் காவேரி போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. இது ஒரு தேசிய பிரச்சனை என்று நிரூபிக்க நடத்தப்பட்ட இந்த போராட்டம் பெரிய அளவில் மாறி உலக அளவில் வைரலாகி உள்ளது. கொல்கத்தா அணிக்கும் சென்னைக்கும் இடையில் இன்று ஐபிஎல் போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் செல்லும் வழியில் தற்போது காவிரி போராட்டம் நடக்கிறது. இதனால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் குறித்துதான் தற்போது மொத்த இந்தியாவும் பேசிக்கொண்டு உள்ளது.தற்போது காவிரி பிரச்சனை இருமாநில பிரச்சனையாக இல்லாமல் தேசிய பிரச்சனையாக மாறியுள்ளது. மற்ற மாநில அணி வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதால் இந்த பிரச்சனை இந்தியா முழுக்க பேசப்பட்டு வருகிறது. காவிரி பிரச்சனையை துச்சமென கருதிய தேசிய மீடியாக்கள் கூட இதை பற்றித்தான் இப்போது பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.சென்னை அணியிலும், கொல்கத்தா அணியிலும் நிறைய வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர்கள், ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்கள், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளை சேர்ந்த வீரர்கள் கூட இருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் தெரியாமல் இருந்த காவிரி பிரச்சனை இப்போது வெளியே வந்து இருக்கிறது.இந்த போராட்டம் ஒரு வகையில் வெற்றியை பெற்று இருக்கிறது என்று கூட கூறலாம். போராட்டம் செய்த மக்களின் முக்கியமான ஒரு எதிர்பார்ப்பு, தேசிய அளவில் இந்த பிரச்சனையை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த போட்டி இப்போது உலக அளவில் வைரல் ஆகி உள்ளது.ஆனால் இந்த போராட்டம் இன்னும் முடியவில்லை. இன்று இரவு 11 மணிக்கு போட்டி முடியும் வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதே டிவிட்டரில் சேப்பாக்கம் சென்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் வைரலாகிவிட்டது. இதனால் உலக அளவில் இன்னும் சில நிமிடத்தில் இந்த ஹேஷ்டேக் வைரலாக வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக