கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இலங்கையின் பெரும்பான்மையினரான சிங்கள மக்களை புறக்கணித்திருப்பதாக கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டேனியல் ஜேன் குற்றம்சாட்டியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் புத்தாண்டு வாழ்த்து செய்திகளில் தமிழ் மக்களுக்கு மாத்திரமே வாழ்த்து கூறப்பட்டிருப்பதாகவும், பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களை அவர் புறக்கணித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.இதன் ஊடாக கனடாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும், இந்த நிலையில், எதிர்வரும் விசாகப்பூரணை தினத்தை முன்னிட்டு, சிங்கள பௌத்த மக்களுக்கு வாழ்த்து செய்தியை பிரதமர் அனுப்ப வேண்டும் என்றும் கனேடிய பாதுகாப்பு ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் பதில் வழங்கியுள்ள கனடாவின் பிரதமர் அலுவலக பேச்சாளர் ஒருவர், தமிழர்கள் விடயத்தில் முன்னைய அரசாங்கம் கடைபிடித்த நடைமுறையையே பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக