பிரான்சில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட 17 வயதான ஈழச் சிறுமி ஒருவர் மூன்று வாரங்களின் பின் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 20ம் திகதி Goussainville நகரில் இருந்து குறித்த சிறுமியை மூன்று நபர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த சிறுமி வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறுமியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் 28 வயதான உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக