26 மார்ச் 2018

பிரான்சில் தமிழ் மாணவி கடத்தப்பட்டுள்ளார்!

Bildergebnis für franceபிரான்ஸ் - பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் ஈழத்தமிழ் மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவியின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.குறித்த போராட்டமானது, Lycée Romain Rolland, 21 Av de Montmorency, 95190 Goussainville என்ற இடத்தில் நாளை மாலை ஐந்து மணிக்கு (உள்ளூர் நேரம்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.பொலிஸாரின் பாதுகாப்பு மற்றும் அனுமதியுடன் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த 20ம் திகதி பாடசாலைக்குச் செல்லும் போது கால் மற்றும் கைகளை கட்டியவாறு எனது மகள் கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன்.மகள் கடத்தப்பட்டு ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. என் மகள் இதுவரையிலும் என் கைகளில் கிடைக்கவில்லை. இந்நிலையில், அனைவரும் ஒன்று சேர்ந்து எனது மகளை மீட்டுதர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன.இது போன்ற சம்பவம் வேறு எந்த பிள்ளைக்கும் வரக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.இந்நிலையில், நாளை பொலிஸாரின் அனுமதியுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொண்டு தமக்கு ஒத்துழைக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும், இதுவரையில் மாணவி குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக