06 செப்டம்பர் 2018

ஏழுபேர் விடுதலை தமிழக அரசே முடிவு செய்யலாம்-நீதிமன்றம் உத்தரவு!

Tamilnadu govt can release 7 tamils on the Rajiv gandhi murder case: Supreme court ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் கடந்த 2013ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. இதற்கு எதிரான மத்திய அரசின் வழக்கையும் சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக