09 செப்டம்பர் 2018

ஏழுபேர் விடுதலை ஆளுநர் ஏற்றே ஆகவேண்டும்,ஜெயக்குமார் அதிரடி!

யார் பெரியவர்? மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களின் விடுதலையில் அரசின் முடிவை கவர்னர் ஒப்புக்கொள்ள வேண்டும், வேறு வழியில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 4 மணியளவில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டம் முடிந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அதில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் பற்றி ஆலோசனை நடத்தினோம். உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் கருணை மனுவை 161வது சட்ட பிரிவின்கீழ் பரிசீலிக்கலாம் முடிவு எடுக்கப்பட்டது.161வது பிரிவு தெளிவாக உள்ளது.அமைச்சரவை முடிவை ஆளுநர் ஏற்றாக வேண்டும். அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதைதான் பின்பற்ற வேண்டும். சட்டத்தில் அப்படித்தான் உள்ளது.இதில் எந்தக் குழப்பமும் இல்லை, தெளிவாக உள்ளது.இன்றே தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். உடனடியாக இப்போதே பரிந்துரையை அனுப்பி வைக்க உள்ளோம்.ஒட்டுமொத்த தமிழரின் எண்ணம் 7 தமிழரையும் விடுவிக்க வேண்டும் என்பதுதான். ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம்தான் இது.அன்று நிறைவேறாமல் போய் விட்டது, இன்று நிறைவேறும். இந்த முறை கண்டிப்பாக அரசின் பரிந்துரை ஏற்கப்படும்.மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டுத்தான் 7 பேரையும் விடுவிக்க முடிவு. உச்ச நீதிமன்றம் அதைத்தான் சொல்லி இருக்கிறது. உச்சநீதிமன்றம்தான் முக்கியமானது, அதற்கு மேலானவர்கள் யாருமில்லை. அதனால் ஆளுநர் இதை ஏற்றே ஆக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக