27 அக்டோபர் 2018

மனோவும் ஹக்கீமும் ரணிலுக்கு ஆதரவு!

மனோ கணேசன்ஆறு எம்.பி.க்களை வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பில் நடந்துவரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.அதைப் போலவே இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமும் ரணில் விக்கிரம சிங்கே கரத்தை பலப்படுத்துவதாக அறிவித்தார்.

நாடாளுமன்றம் நவம்பர் 16-வரை ஒத்திவைப்பு

இதனிடையே நாடாளுமன்றத்தை நவம்பர் 16 வரை ஒத்திவைத்து வர்த்தமாணி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஜனாதிபதிதான் வெளியிட முடியும்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன-ராஜபக்ஷ அணிக்கு நாடாளுமன்றத்தில் போதிய பலம் இல்லாததால்தான் அதனை ஒத்திவைக்கிறார்கள் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார் ரணில் விக்கிரமசிங்கே.
உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டிய கடமை ஜனாதிபதிக்கு உண்டு என்று கூறிய ரணில் உடனடியாக கூட்டுமாறு வேண்டுகோளும் விடுத்தார். சுகாதார அமைச்சர் ராஜிச சேனாரத்னவும் இதே போன்ற கருத்தைத் தெரிவித்தார்.

சம்பந்தன் கருத்து

இதனிடையே இரு நபர்களின் அடிப்படையில் முடிவு எடுக்க முடியாது. கொள்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். கட்சிகளை பற்றி நான் சிந்திக்கவில்லை. எமது முடிவை நாம் ஆராய்ந்து எடுக்க வேண்டிய நேரத்தில் எடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நன்றி:பிபிசி தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக