26 நவம்பர் 2019
பின்வாங்கா போர்த்திறன்,அறம் வழுவா ஆட்சித்திறன்,மதுவை மக்களிடம் நெருங்க விடா மாவீரன்!ராமதாஸ் வாழ்த்து!
22 நவம்பர் 2019
தமிழர் தேசத்தை பாதுகாக்க தமிழ்த் தேசியப் பேரியக்கம்!
தமிழ் தாயகத்தை சிங்களக் குடியேற்றங்களால் நிறைப்பார்கள். அனைத்துலக அரசுகளுடன் நலன் சாரந்த உறவுகளைப் பேணி அவர்களைத் திருப்திப்படுத்திக் கொண்டு தமது திட்டங்களை முன்னெடுப்பார்கள். இத்தகையதொரு சூழலில் தமிழர் தேசத்தை பாதுகாக்க தமிழ்த் தேசிய பேரியக்கம் ஒன்றை கட்டியெழுப்ப நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் ஒன்றினை விடுத்துள்ளது.
இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய இராஜபக்ச சிங்கள மக்களின் வாக்குகளால் பெருவெற்றியடைந்திருப்பது சிங்கள பௌத்த தேசியவாதம் சிங்களதேசத்தில் ஆழமாக வேருன்றியிருப்பதனை நன்கு வெளிப்படுத்துகிறது. சிங்கள மக்களது வாக்குகளால் மட்டும் என்னால் வெற்றிகொள்ளமுடியும், தமிழ் முஸ்லீம் மக்களது வாக்குகள் எனக்குத் தேவையுமில்லை எனத் திடமாகக் கூறி அதன் வாறே கோத்தாபய இராஜபக்ச வெற்றி பெற்றிருப்பதும்கூட சிறிலங்காவை முன்னிருந்ததைவிடத் தீவிரமான இனவாதத்தின் ஒரு தோற்றமாகவே வெளிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா அரசு சிங்கள பௌத்த இனவாதநிறுவனமாக இவ்வாறு இறுகிப்போயிருக்கும் நிலையில், புதிய அரச அதிபரின் செயற்பாடுகள் சிறிலங்கா அரசை மேலும் சிங்கள பௌத்தமயப்படுத்தும் வகையில்தான் அமையும். எல்லாளனைத் தோற்கடித்த பின்னர் துட்டகைமுனுவால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ருவான்வெலிசாய விகாரை வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்தமையின் ஊடாக கோத்தாபய தன்னைத் தமிழர்களை வெற்றி கொண்ட நவீன துட்டகைமுனுவாக சிங்கள மக்கள் மனதில் பதிய வைக்க முயல்கிறார் என்றுதான் நாம் பார்க்கிறோம்.
ஒரு இனவழிப்புக் குற்றவாளியை அந்த இனவழிப்புக்குத் துணைபோன மக்கள் கூட்டம் ஆதரித்து நி;ற்பதனால் மட்டும் அவர் புனிதராகி விட முடியாது. உலகத் தமிழ் மக்களின் ஆன்மபலத்துடன், உலகில் நீதிக்காகப் போராடும் தோழமைகளுடன் இணைந்து, தமிழின அழிப்புக் குற்றவாளி கோத்தபாய இராஜபக்சவினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திலும் (ICC), சிறிலங்கா நாட்டினை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உலக நீதிமன்றிலும் (International Court of Justice) நிறுத்தும் போராட்டத்தை நாம் வீச்சாக முன்னெடுப்போம்.
சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்துக்கு முன்னால், அரசு அதிபருக்கான விலக்கு( head of state immunity) என்ற திரைக்கு பின்னால் கோத்தபயவும், சிறிலங்கா நாடு என்ற வகையில் உலக நீதிமன்றத்தின் முன்னால் இறைமைக்கான விலக்கு (sovereign immunity) என்ற திரைக்கு பின்னாலும் ஒளித்து கொள்ள முடியது சுட்டிக்காட்டுகின்றோம்.
எமது இந்தப் பிரகடனம் எமது தார்மீகக்கோபத்தில் இருந்து மட்டுமல்ல, ஒரு இனஅழிப்புக் குற்றவாளி அரச தலைவராக இருக்கும் நிலையினை உலக மனச்சாட்சிக்குச் சுட்டிக்காட்டும் நோக்கத்தினையும் தன்னகத்தே கொண்டது. இவ்வேளையில் நடைமுறை யதார்த்தத்துக்கு இசைவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் சிலர் எண்ணலாம்.
இவ்விடத்தில் நாம் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். தமிழ் மக்கள் தமது தேசத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ்த் தேசியப் பேரியக்கமொன்றைக் கட்டியெழுப்பி அர்ப்பணிப்பு மிக்க ஜனநாயகவழிப் போராட்டங்களுக்குத் தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. புதிய ஆட்சியாளர்களிடம் இருந்து கருணை எதனையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. சிறிலங்காவின் புதிய அரசதலைவரும், தொடர்ந்து அமைந்துள்ள மகிந்த ஆட்சியும் தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்யும் வேலைகளை வேகப்படுத்துவார்கள். சிறிலங்கா என்பது ஒரே மக்களைக் கொண்ட நாடு என்ற கொள்கையின் கீழ் சிங்கள மேலாண்மைக்குள் தமிழ் முஸ்லீம் மக்களைச் சிறைப்பிடிக்க முனைவார்கள். தமிழ் தாயகத்தை சிங்களக் குடியேற்றங்களால் நிறைப்பார்கள். அனைத்துலக அரசுகளுடன் நலன் சாரந்த உறவுகளைப் பேணி அவர்களைத் திருப்திப்படுத்திக் கொண்டு தமது திட்டங்களை முன்னெடுப்பார்கள்.
இத்தகையதொரு சூழலில் தமிழ் மக்களுக்கு இரு தெரிவுகள் மட்டுமே இருக்கும்.
ஒன்று, யதார்த்தம் என்று கூறி புதிய ஆட்சியாளர்களுடன் நல்லுறவைப் பேண முயன்று சிங்கள மேலாண்மைக்குள் அமிழ்ந்து போவது.
அடுத்தது, நமது சக்தி அனைத்தையும் திரட்டி, நம்மைத் தேசமாக ஒருங்கிணைத்து நமது இருப்புக்கும் உரிமைக்காகவும் போராடுவது.
முதலாவது தெரிவு மிகவும் அவமானகரமானது. இது இனஅழிப்புக்கு வழிகோலும். இதனை நாம் தெரிவு செய்ய முடியாது. தமிழ் மக்கள் இரண்டாவது தெரிவினை மேற்கொண்டேயாக வேண்டும். இதனைத் தமிழ் மக்களின் தேசிய அரசியற் தலைவர்களாகத் தம்மை அடையாளப்படுத்துவோர் தாமே முன்னின்று எடுத்துச்செல்ல வேண்டும். அரபு வசந்தம், பிரான்சின் மஞ்சள் அங்கிப் போராட்டம், மற்றும் தற்போது நடைபெறுகின்ற கொங் கொங் மக்கள் போராட்டம், பொலிவியா மக்கள் போராட்டம், ஈரான் மக்கள் போராட்டம் ஆகியன மக்கள் போராட்டங்களின்; வலிமையினை எடுத்தியம்புகின்றன.
எமது பார்வையில் தமிழ் மக்கள் போராடினால்தான் வாழ்வு என்ற கட்டத்தை அடைந்துள்ளார்கள் என்றே கருதுகிறோம். இது சவால் நிறைந்த காலகட்டமாகவே இருக்கும். இதனைத் தமிழ் மக்கள் எதிர்கொள்வது நெருப்பாற்றை நீந்திக் கடப்பது போன்றதாகவே அமையும். இருந்த போதும் இதுதான் யதார்த்தமாக அமையப் போகிறது. இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ளத் தாயகத் தமிழ் மக்கள், புலர்பெயர் தமிழ் மக்கள், தமிழ்நாடு மக்கள், உலகத் தமிழ் மக்கள் என அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாக இருக்கும்.
சிறிலங்காவின் தமிழின அழிப்பாளிகளை அனைத்துலக அரங்கில் நீதியின் முன் நிறுத்தும் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு கோத்தாபய இராஜபக்ச அரசதலைவராகத் தேர்வு செய்யப்பட்டமை தார்மீகத் தளத்தில் பலம் சேர்க்கும். நீதியின் பக்கம் நிற்கும் உலக மக்களின் ஆதரவை எமக்குப் பெற்றுத் தரும். தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தை நடத்தும் வகையில் தமிழ் தேசம் மாவீரர்கள் நினைவுடன் தன்னை உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டும். என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
02 அக்டோபர் 2019
லலிதா யுவல்லரியில் 50 கோடி பெறுமதியான நகைகள் கொள்ளை!

08 செப்டம்பர் 2019
மூவரின் தூக்கு கயிற்றை அறுத்த வீரவாள் ராம் ஜெத்மலானி!

12 ஆகஸ்ட் 2019
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஜனநாயகவிரோதம்-விஜய் சேதுபதி!

26 மே 2019
கல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை,திமுகவை சாடுகிறது நமது அம்மா!

23 ஏப்ரல் 2019
எனது பேத்தியின் தலையில் கைவைத்து விட்டு உள்ளே சென்றார் குண்டுதாரி!

14 ஏப்ரல் 2019
மோடி வாக்கு சேகரிக்க வந்ததே ஒரு வாரிசுக்காகத்தான்!

03 ஏப்ரல் 2019
இயக்குனர் மகேந்திரன் மறைவு!சீமான் அறிக்கை!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது,
நாடகங்களிலிருந்து அறிவியல் கண்டுபிடிப்பான திரை வடிவத்திற்கு கலை வடிவம் மாறுதல் பெற்றாலும் நாடகங்களின் இறுக்கமான கதைசொல்லல் முறைமையையும், நுட்பமான உணர்வுகள் அற்ற நடிப்பு முறைமையையும் திரைக் கலை கைவிடாமல் நாடகப் பாணியிலான திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில்..இயல்பான காட்சிகள், அசலான மனிதர்கள் , வியக்க வைக்கும் திரைக்கதை என தமிழ் திரையுலகிற்கு புது ரத்தம் பாய்ச்சிய மாமேதை மறைந்த இயக்குனர் மகேந்திரன் அவர்கள். அவருடைய உதிரிப்பூக்கள் உலகத் திரைப்பட வரிசைக்கு தமிழ் திரை உலகின் மறக்கமுடியாத பூங்கொத்து. புகழ்பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்கின்ற சிறு நாவலை தழுவி உருவாக்கப்பட்ட உதிரிப்பூக்கள் திரைப்படக் கலையை பயில விரும்பும் மாணவர்களுக்கு முதன்மைப் பாடமாக இன்னுமும் திகழ்கிறது. அதேபோல இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் உச்ச நட்சத்திரம் திரு ரஜினிகாந்த் அவர்கள் நடித்த முள்ளும் மலரும் தமிழ் திரையுலகின் மறக்க முடியாத மாபெரும் படைப்பாக திகழ்ந்து வருகிறது. காட்சிகளின் இடையே நிகழுகின்ற வேதியியல் மாற்றத்தை சரியாகப் புரிந்துகொண்டு உயிரோட்டமாக ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் இயக்குனர் மகேந்திரன் ஒரு மாமேதை.
கதாபாத்திரங்களின் நுட்பமான உணர்வுகளை, மென்மையான காட்சிகள் மூலம் அழகாக திரையில் வடித்தெடுப்பதில் அவருக்கு இணையானவர் இந்திய திரை உலகில் எவரும் இல்லை.
தனது இறுதி காலத்தில் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தேர்ந்த நடிகராகவும் நடித்து புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளர் . சிறந்த எழுத்தாளர். அவரின் கலைத் திறமையை கண்டு கவரப்பட்ட நம் தேசிய தலைவரும் என்னுயிர் அண்ணனும் ஆகிய மேதகு வே பிரபாகரன் அவர்கள் நேரில் சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்து இயக்குனர் மகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து திரைப்படக் கலை குறித்து விவாதித்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு.
தமிழ் தேசிய இனத்தின் ஆற்றல்மிக்க கலையாளராக தமிழ் திரை உலகின் மூத்த படைப்பாளியாக திகழ்ந்த இயக்குனர் மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் தமிழ் திரை உலகின் மாபெரும் இழப்பில் அவர்களோடு ஒருவனாக நானும் பங்கேற்கிறேன். மாமேதை இயக்குனர் மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் திரைக்கலையின் மகத்தான மகுடம் ஐயா இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084
21 மார்ச் 2019
18 மார்ச் 2019
28 பிப்ரவரி 2019
அபிநந்தனை வரவேற்க புறப்பட்டார் தந்தை!

அந்த பகுதி மக்கள் இனிப்பு வழங்கி அபிநந்தன் விடுதலையாவதை கொண்டாடினர்.
விடுதலை செய்தி மகிழ்ச்சி தருவதாக மக்கள் தெரிவித்தனர்.இந்த சூழலில் அபிநந்தனை வரவேறக் அவரது தந்தை சிம்மக்குட்டி வர்தமான் டெல்லி புறப்பட்டார்.
செய்தியாளர்களை சந்திப்பதை அவர் தவிர்த்தார்.
அந்தப் பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.முன்னதாக பல அரசியல் கட்சி தலைவர்கள், காவல் படை அதிகாரிகள் அபிநந்தனின் தந்தயை அவரது வீட்டில் சந்தித்து உரையாடினர்.
இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான் கான் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்றார்.
இதனை அடுத்து இன்று மாலை பத்தரிகையாளர்களை முப்படை தளபதிகள் சந்தித்தனர்.
வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தில் இருந்து பாகிஸ்தானில் தரையிறங்கிய விமானி அபிநந்தனை அமைதி நிமித்தம் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவிப்பதை அவர்கள் தவிர்த்தனர்.
நன்றி:பிபிசி தமிழ்
06 ஜனவரி 2019
தம்பி சிம்புதான் நிஜ சூப்பர் ஸ்டார்-சீமான் புகழாரம்!

உண்மையிலேயே ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆண் மகன். ரஜினிகாந்த், கமல் எல்லாம் பேசக்கூடாது. அவர்கள் ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள். என் தம்பி ஒருவர் இருக்கிறார் விஜய். சர்க்கார் படத்தில் பேசினேன் என்றால் ஆமாம் பேசினேன் என்று சொல்லவேண்டியதுதானே. உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது. என் படத்தில் நடிக்கமாட்டாரு ஆனால் நான் பேசுவதையெல்லாம் பேசி நடிப்பாரு என் தம்பி விஜய். என்ன செய்வது என் தம்பியாக போய்விட்டார்.தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே என் தம்பி சிலம்பரசன்தான். மூன்று படம் சிம்புவை வைத்து எடுக்கப்போவதாக முடிவு செய்தாச்சு. அதோட பலபேர் நெஞ்சு வெடிக்க போகுது. தனக்கு நேர்மையானவன், துணிவானவன், அச்சப்படாதவன் அவன்தான் ரியல் சூப்பர் ஸ்டார். கொளுத்தி எடுக்குறோம் அண்ணனும் தம்பியும் சேர்ந்து.எல்லார்கிட்டையும் கதையை சொன்னேன் எல்லாரும் பயந்துட்டாங்க ஆனா நான் நடிக்கிறேன் அண்ணா என்று என் தம்பி சிம்பு மட்டும்தான் சொன்னார். ஏன் சொன்னார் அவர்தான் தமிழன். அண்ணாவுக்கு எம்ஜிஆர் அண்ணனுக்கு நீதான்'னு சொல்லிட்டேன் என்றார் நகைச்சுவையாக.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)