27 மே 2018

பசுவதை தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தம் காட்டம்!


இலங்கை இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.பசுக்கள் மீதான வதைகளை எதிர்த்து இந்து பௌத்த மத தலைவர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.இலங்கை இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.பசுக்கள் மீதான வதைகளை எதிர்த்து இந்து பௌத்த மத தலைவர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,“எங்கள் பகுதிகளுக்கு வந்தால் எங்கள் மரபுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். இலங்கையானது இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல. எங்களுக்குரிய பண்பாட்டு மரபிருக்கிறது.எமது பகுதிகளுக்கு வந்தால் எங்கள் மரபுகளோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். அப்படியில்லையாயின் அவுஸ்திரேலியப் பிரதமர் சொல்லவதைப் போல உங்கள் நாட்டுக்கே போய் விடுங்கள்.
இந்த மண் புனிதமான மண். பசுக்களைப் பேணுவதால் அது புனிதமானது. எமது புனிதமான மண்ணைக் கெடுக்காதீர்கள்.எப்படி ஒரு ஆணை, பெண்ணை, குழந்தையை கொல்வது கொடுமையோ அவ்வாறே பசுவைக் கொல்வதும் கொடுமையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

23 மே 2018

புரட்சிகர இயக்கத்தினர் மட்டும் எப்படி இலக்கானார்கள்?

தப்பிய அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் தூத்துக்குடிப் படுகொலைகள் பல அபாயகரமான கேள்விகளை எழுப்பாமல் இல்லை. புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் போன்ற இயக்கங்கள், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி என குறிப்பிட்டுச் சொல்லும்படியானவர்கள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு அரசியல் கட்சியினருமே இக்கோர துப்பாக்கிச் சூட்டில் பாதிக்காமல் தப்பியது எப்படி என்பது ஆகப் பெரும் கேள்வி. தூத்துக்குடிப் படுகொலைகளின் பின்னால் மாபெரும் சதி இருக்கிறதோ என்கிற சந்தேகத்தை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 3 மாதங்களாக பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அந்த மக்களைச் சந்திக்க முடியாத நிலைதான் இருந்தது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் பிரதான அரசியல் கட்சிகள் மீது மக்கள் கடும் கோபத்தில்தான் இருந்தனர். அதனால்தான் சிறு சிறு இயக்கங்கள், கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் அங்கே வந்து ஆதரவு தெரிவிக்க அவர்கள் அனுமதித்தனர்.ஆனால் பிரதான கட்சியினரை உள்ளேவிடாமலேயே விமர்சனங்களை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். ஸ்டெர்லைட்டை முன்வைத்து பிரதான கட்சிகள் மீது மக்களுக்கு சந்தேகமும் இருந்தது.ஸ்டெர்லைட்டிடம் தூத்துக்குடி அரசியல் பிரமுகர்கள் பெற்ற ஆதாயங்கள் போராட்ட களத்தில் மக்களின் பேசுபொருளாகவும் இருந்ததை மறுக்க முடியாது. இந்த நிலையில் மேம்போக்காக மக்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என பசப்பு வார்த்தைகளைத்தான் இந்த அரசியல் கட்சிகள் தெரிவித்தும் வந்தனர்.மேலும் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இந்த போராட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வரக்கூடாது என தடுக்கின்றனர் என்றும் பகிரங்கமாக பொதுவெளிகளில் ஊடகங்களிலும் பேசப்பட்டது. இந்த நிலையில் உச்சகட்டமாக 100-வது நாள் தன்னெழுச்சிப் புரட்சியில் திட்டமிட்ட வகையில் பலர் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.போராட்டத்துக்கு முதல் நாள் 65 பேரை இலக்கு வைத்து போலீஸ் தேடியது.. இதில் 10 பேர் மட்டுமே சிக்கினார்கள் என்பது அப்பகுதி ஊடகத்தார் அவர்களது ஊடகங்களில் சொன்ன செய்தி. இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்களில் புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழரசன், மக்கள் அதிகாரம் ஜெயராமன் இருவரும் அடக்கம். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்திருக்கிறார்.ஆனால் பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர் அல்லது போலீசாரின் பாதுகாவலில் இருந்திருக்கின்றனர். அப்படியெனில் போராட்டக்காரர்கள் மீதான வன்மங்களைத் தீர்க்க கட்சிகளும் அரசும் போலீஸும் இணைந்து திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டை நடத்தியதா? என்கிற கேள்வி இப்போது விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.மக்கள் தன்னெழுச்சி போராட்டங்களை ஆதாயமாக்கிக் கொண்டு அரசியல் அறுவடை செய்ய திராணியற்றவர்களும் அதிகார வர்க்கத்துடன் இப்படுகொலையில் கை கோர்த்து உள்ளனரா? அரசியலில் போணியாகவே முடியாதவர்களுக்கு மக்களின் போராட்டங்கள் எரிச்சலைத்தான் தரும்.. ஆதாய அரசியல் மட்டுமே போதும்... கொள்கை கோட்பாடு நாடகமெல்லாம் நமக்கு மட்டும் தெரியும் என்கிற மமதையில் இருக்கும் அந்த அரசியல்வாதிகளின் கள்ளக் கூட்டில்தான் இந்த 'இனப்படுகொலை' நிகழ்த்தப்பட்டதா?வரலாறு விடை சொல்லும்!

18 மே 2018

நாரந்தனையில் தொடரும் பசுக்கொலைகள்!

2018-05-18 நாரந்தனை வடக்கில் தொடரும் பசுவதைகள்! முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை நினைவுநாளான இன்று கோமாதா என அழைக்கப்படும் பசுவைக் கொன்று இறைச்சியாக்கும் ஈனச்செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.கட்டாக்
காலிகள் அழிக்கப்படவேண்டும் என கடந்தகாலங்களில் கோஷமிட்ட சிலர் இந்த பசுக்கொலைக்கு ஆசீர்வாதம் வழங்குவதாக அறியப்பட்டுள்ளது.கோயில் திருவிழாவுக்கு பால் கொண்டுவா, தயிர் கொண்டுவா என விளம்பரம் விடும் கோயில் நிர்வாகிகள் பசுக் கொலையைக்கண்டிப்பதில்லை. மனச்சாட்சி இருந்தால் இதைக் கண்டிக்கலாமே!
பொது அமைப்புகள் எவையும் கண்டிப்பதாகத் தெரியவில்லை.
என்னினமே! என் சனமே! எமக்கேன் இந்த ஈன நிலை?
ஒவ்வொரு நாளும் கொலைசெய்யப்பட்டு இறைச்சிவாரப்பட்டுக் கிடக்கும் பசுக்களின் உடலைத் தரிசனம் செய்வது தான் எமது தலைவிதியா? சைவசமயிகள் என்று பட்டை அடித்துக்கொண்டு திரிய வெட்கம் இல்லையா? நாரந்தனைக் கந்தசாமி கோயில் திருவிழா நாளை ஆரம்பமாம்! 12 நாளும் தவறாமல் செல்லுங்கள்! மாடுகள் செத்தால் உங்களுக்கென்ன? நீங்கள் எல்லாம் சைவசமயிகள் அல்லவா?
யாராவது கேணைப்பயல்கள் மாடுகளைப்பற்றி விசனப்படட்டும்!

நன்றி:முன்னாள் அதிபர் திரு,ஞானசோதியன்(முகநூல்)

17 மே 2018

ஈபிடிபி ஆசிரியையின் செயலால் கொந்தளிப்பு!

Related imageஇருபாலை பகுதியில் மாணவர்களை முன்பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டுச் சென்ற முன்பள்ளி ஆசிரியை தொடர்பான தகவல் வெளியானதை அடுத்து கல்வி திணைக்கள அதிகாரிகளால் குறித்த முன்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.இருபாலை தெற்கு ஞான ஒளி சனசமூக நிலையத்தில் இயங்கி வந்த குறித்த முன்பள்ளியில் மாணவர்கள் கற்று கொண்டு இருந்த நேரம் திடீரென ஆசிரியை மாணவர்களை முன்பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டார்.மூடப்பட்ட முன்பள்ளிக்குள் மாணவர்கள் தனித்து இருந்தபோது, அச்சம் காரணமாக அவலக்குரல் எழுப்பினர்.அதனை அவதானித்த அயலவர்கள் முன்பள்ளி ஆசிரியையின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்ததுடன் மாணவர்களை மீட்கும் முகமாக ஆசிரியையை தேடி சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கும் அயலவர்கள் தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து குறித்த முன்பள்ளிக்கு விரைந்த அதிகாரிகள் மாணவர்களை மீட்டதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டனர். அத்துடன் தற்காலிகமாக முன்பள்ளியை மூடுமாறு பணித்துள்ளனர்.
குறித்த முன்பள்ளியின் ஆசிரியை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் என்று தெரிவிக்கப்படுகிறது.

13 மே 2018

இந்தோனீசியாவில் தேவாலயங்கள் மீது தற்கொலைத் தாக்குதல்!

தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் - 9 பேர் பலிஇந்தோனீசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபயாவில் உள்ள மூன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தற்கொலை படையினர் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 9 பேர் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.சில நிமிட இடைவெளியில் நடந்த இந்த தாக்குதல்களில் பல டஜன் மக்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
தாக்குதல் நடந்த ஒரு தேவாலயத்தின் நுழைவாயிலில் குப்பைகள் மற்றும் சிதிலங்கள் சிதறிக் கிடப்பதை தொலைக்காட்சியில் வெளியான படங்கள் காண்பித்துள்ளன.
முஸ்லீம்கள் பெருமான்மையாக வாழும் இந்தோனீசியாவில், அண்மைய மாதங்களில் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்து வருகிறது.இந்த குண்டுவெடிப்புகள் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு நடந்துள்ளது.இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களை, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட ஜெம்மா அன்ஷுரட் தவ்லா என்ற குழுவால் நடத்தியிருக்கலாம் என்று இந்தோனீசியாவின் உளவுத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

நன்றி:பிபிசி தமிழ்

06 மே 2018

ரணிலுடன் எழுத்து மூல ஒப்பந்தம் என்கிறார் சிவசக்தி ஆனந்தன்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாம் வெறுமனே ஆதரவளிக்கவில்லை. எழுத்து மூலம் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்ட பிறகே ஆதரவினை வழங்கியுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, பாவற்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அண்மையில் நானும் எனது கட்சியின் தலைவரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உரையாடி இந்தோம். இந்த சந்திப்பு குறித்த உண்மையை தெரியாத சிலர் பொய்யாக வதந்திகளை பரப்பி வந்தனர். ஆனால் அந்த சந்திப்பின் உண்மைத் தன்மையினை தற்போது வெளிப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.நாம் அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகள், காணி விடுவிப்பு, காணாமல் போனோர் ஆகிய விடயங்கள் உள்ளடக்கிய சில கோரிக்கைகளையே பிரதமருக்கு எழுத்து மூலமாக முன்வைத்தோம்.இந்த நிலையில் குறித்த கோரிக்கைக்கு பிரதமர் ரணில் உடன்பட்டதுடன், எழுத்து மூலமாக கையெழுத்திட்டு ஒப்பந்தமொன்றை வழங்கியுள்ளார்.
நாம் வெறுமனே பிரதமருக்கு ஆதரவளிக்கவில்லை. எழுத்துமூல உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே ஆதரவினை வழங்கியுள்ளோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தனும் 3 வரவு செலவுத் திட்டத்துக்கும் ஆதரவளிக்க எவ்வித எழுத்து மூல ஒப்பந்தத்தையும் செய்ய முடியாதுள்ளது.இதற்கு காரணம் அவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதால் எதனையும் கோர முடியாதவர்களாக உள்ளனர்.ஒரு தனி மனிதனாகிய என்னால் ரணில் விக்ரமசிங்கவுடன் நிபந்தனை போட முடியுமாக இருந்தால் 15 பேராக உள்ள கூட்டமைப்பினர் மக்களுக்காக எவ்வளவு விடயங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.பிரதமருடன் செய்து கொண்ட ஒப்பந்த நகலையும் சிவசக்தி ஆனந்தன் மக்கள் முன்பு காண்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

01 மே 2018

புலிகள் இயக்கப் போராளி பிரதீபனுக்கு மக்கள் இறுதி அஞ்சலி!

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி பிரதீபனின் இறுதிக்கிரியைகள் நேற்று மதியம் முல்லைத்தீவு முத்தையன்கட்டிலுள்ள அவரது வீட்டில் இடம்பெற்றது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் பணியாற்றிய ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த  போராளி பிரதீபன் நேற்றுமுன்தினம் உயிரிழந்திருந்தார்.உயிரிழந்த போராளியின் இறுதி வணக்கக் கூட்டம் முத்தையன்கட்டு இளந்தளிர் கல்வி நிலையத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. அவரது இறுதி வணக்க ஊர்வலமும் மிகவும் உணர்வெழச்சியுடன் நடத்தப்பட்டுள்ளது. இந்த இறுதி நிகழ்வின்போது பெருந்திரளான பொதுமக்கள்,மற்றும் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.