10 ஜூன் 2018

கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் போராட்டத்திற்கு ஆதரவு!

10-06-2018
ஊடக அறிக்கை

கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் போராட்டத்திற்கு ஆதரவு!

வடபகுதி மீனவர்களின் மீன்பிடித்தொழிலை அழிக்கும் வகையில் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ் மாவட்ட கடற்தொழில் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது.
வடபகுதி மீனவர்களின் மீன்டிபிடித் தொழிலை பாதிக்கும் வகையில் தென்பகுதி மீனவர்களுக்கு கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை சிறீலங்கா அரசு வழங்குவதன் மூலம் வடபகுதி மீனவர்களின் தொழிலை அழிக்கும் நடவடிக்கைகள் 2015 ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தொடர்ந்து வருகின்றது.வடமராட்சி கிழக்கின் கடற்கரையோரமாக ஐநூறுக்கும் அதிகமான மீன்வாடிகளை அத்துமீறி அமைத்துள்ள வெளிமாவட்ட மீனவர்களின் நடவடிக்கைகளால் அப்பிதேச மீனவர்களின் மீன்பிடித் தொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வெளிமாவட்ட மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அகற்ற வேண்டும், கடலட்டை பிடிப்பதற்கு வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும்
என்ற கோரிக்கைகள் உள்ளடங்கலாக மீன்பிடித் தொழிலை பாதுக்காக்கும் வகையில் யாழ் மாவட்ட கடற்தொழில் சம்மேளத்தினால் நாளை
திங்கட்கிழமை 11.06.2018
அன்று யாழ் மாவட்டத்தில் நடாத்தப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன்,
மீனவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தமிழ்த் தேசத்தின் கடல்சார் பொருளாதாரத்தை பாதுகாக்கவும் அனைவரும் ஒற்றுமையாக அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக