08 ஜூன் 2018

பெளத்த இனவாதப் போக்குடன் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மோசமான சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டில் இருப்பதாக நவ சமசமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன குற்றம்சாட்டியுள்ளார். அதனாலேயே தமிழ் மக்களின் தேசியப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்காக தயாரிக்கப்பட்டு வந்த புதிய அரசியல்யாப்பு உருவாக்கம் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நவ சமசமாஜக் கட்சியின் ஏற்பாட்டில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்று கொழும்பு மருதானையில் நேற்று நடைபெற்றது. நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகுகருணாரத்ன, இலங்கை சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா, புரவெசி பலயஅமைப்பின் இணை ஏற்பாட்டாளர் காமினி வெயங்கொட, காணாமல் போனோரை கண்டறியும் குழுவின் இணைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் மற்றும் தென்னிலங்கை பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.ஏற்படுத்தப்பட்டுள்ளஆணைக்குழுவின் அறிக்கையிலும் பயங்கரமான முறையில் படுகொலைகளும், காணாமல்ஆக்கப்பட்டவைகளும் உள்ளன. அவற்றை ஆராய்ந்து நீதியை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இன்றும் செயற்படுத்தப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகமும்இதே நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த விவகாரத்தில் இறுதித்தீர்மானத்தை எடுத்து கைது செய்து, தண்டனையை வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாத அளவுக்கு இன்று சிங்கள பேரினவாத சக்திகளின் இடையூறுகள் நாட்டில் செயற்பட்டு வருகின்றன. சாலியபீரிஸ் அவர்களும் காணாமல் போகவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்களே உள்ளனர் என்றும் கூறியுள்ளார். ஆனால் விசாரணைசெய்வதற்கும், நீதிபதிகளின்குழுக்களை அமைப்பதற்கும் சாத்தியங்கள் இல்லை என்றுதான் தெரிகிறது.
சர்வதேசத்தின்உதவிகளையும் பெறமுடியாது. இவற்றை கூறும்போதே சிங்கள இனவாத சக்திகள் கூச்சலிட்டு பல்வேறு எதிர்கருத்துக்களை கூற ஆரம்பிக்கின்றன. அதனால் முதலாவதாக சிங்கள இனவாத சக்திகளை அழிப்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் சுத்தப்படுத்துவதற்கான கருத்தாடலை ஆரம்பிக்க வேண்டும். இப்போது பணங்களை விரயம்செய்து அமைப்புக்களை ஏற்படுத்தியும்ஒன்றையும் செய்யமுடியாவிட்டால் அதில் பயனில்லை.80களில் மாகாண சபை முறையை எதிர்த்து ஜே.வி.பியினர் கிளர்ச்சி செய்தனர். மாகாண சபை வேண்டாம், அதற்கு உதவினால் கொலை செய்வோம், வாக்களித்தால் விரல்களை வெட்டுவோம் என்று அன்று அறிவித்தனர். இரண்டாவது வேறுமொழிகளுக்கு சமவுரிமை அளிக்கமுடியாது, தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜாவுரிமை அளிக்கமுடியாது என்ற மூன்று விதமான விடயங்களை முன்வைத்தே ஜே.வி.பியினர் கிளர்ச்சிகளை செய்தனர்.இன்று அந்தவிதமானஇனவாத சிந்தனைகளும் ஜனாதிபதிக்கு இருப்பதால்தான் அவரும் சற்று தடுமாற்றம் அடைகின்றார். அசியல்யாப்பை மாற்றுவதற்கு பெரிதும் கஷ்டப்பட்டு வரைபுகளைகொண்டுவந்தனர். இன்று அந்த முயற்சி ஸ்தம்பிதமடைந்துள்ளது.இனவாத சக்திகளால் அதற்கு தடைக் கற்கள் இடப்பட்டுள்ளன. அதனை எதிர்கொள்ள வேண்டும் அல்லது அவற்றை தகர்த்தெறிய வேண்டும். ஆனால் அவற்றை செய்யாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் பிரச்சினைகள் தீராது. ரணில் விக்கிரமசிங்கவிடம் ஏன் பேசுகிறீர்கள், அவர் வங்கிக் கொள்ளையாளர் அல்லவா என பலரும் என்னிடம் வினவுகின்றனர். வங்கிக் கொள்ளையாளரா அல்லது கொள்ளைக்காரரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதனைப் பார்க்கிலும் இனவாதமே பயங்கரமானது. இனவாதத்தை அழிப்பதற்காக வங்கிக் கொள்ளையரானாலும் அவருடன் சேர்ந்து செயற்பட நான் தயார்” என்றார் விக்கிரமபாகு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக