தெற்கு ஜெர்மன் நகரான முனிஸில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதில் பலர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.
அங்கு காவல்துறையினர் சுற்றி வளைத்து எதிர் நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிதாரி ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.ஒலிம்பியா வணிக வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள மக்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதிக்கு மக்களை வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் பல பேர் உயிரிழந்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக காவல்துறை கூறுகிறது.திங்கட்கிழமையன்று போவேரியாவில் குடியேறி ஒருவர் தொடரூந்தில் ஐந்து பேரை குத்தியதை அடுத்து பாதுகாப்பு படைகள் எச்சரிக்கப்பட்டிருந்தனர்.மேலும் பல தாக்குதல்கள் நடக்கலாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.ஒரு தாக்குதல்தாரியைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன. சம்பவம் நடைபெற்ற இடத்தில் உலங்குவானூர்திகள் பறப்பதாகவும், கடைகளில் உள்ள ஊழியர்கள் வெளியே வர முடியாமல் தவிப்பதாகவும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக