04 டிசம்பர் 2016

முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு!லண்டன் மருத்துவர் அவசர ஆலோசனை!

அப்பல்லோ மருத்துவமனையின் முன் குழுமியிருக்கும் கூட்டம்சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல் நலன் குன்றியதால், மருத்துவமனையின் முன் தற்போது கட்சித் தொண்டர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்பட பெருங் கூட்டம் திரண்டுள்ளது.முன்னதாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்துவருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று உடல் நலக் குறைவின் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வருகைத்தந்துள்ளார்.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயிலுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அவருடைய உடல் நலம் பெற மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று அப்போலோ கேட்டு கொண்டுள்ளது.முன்னதாக, கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் சிகிச்சை பெற்று வந்தார்.
சற்று உடல் நலம் பெற்று, பொது வார்டுக்கு மாற்றப்பட்டு, சீக்கிரம் முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என்று இன்று முற்பகல் அதிமுக தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ தெரிவித்தது.அப்பல்லோ மருத்துவமனையின் முன் குழுமியிருக்கும் கூட்டம்அப்பல்லோ மருத்துவமனையின் முன் குழுமியிருக்கும் கூட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக