27 நவம்பர் 2016

தமிழீழத்தில் பெரும் எழுச்சி கொண்ட மாவீரர் நாள் நிகழ்வுகள்!

கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்று மாலை 6.05 மணிக்கு ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் பங்கேற்றனர்.கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடந்த நிகழ்வில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், ஈகைச்சுடர் ஏற்றி வைத்தார். இவ் அஞ்சலி நிகழ்வில், வடமாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.அதேவேளை, தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி - முழங்காவில் துயிலுமில்லத்தில், நடந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். பொதுச்சுடரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏற்றிவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக