புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஊழல் மோசடியில் சிக்கி உயிரைக் காப்பாற்ற தப்பியோடி வந்தவர் தான் கருணா என்று சிறீலங்காவின் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மல்வத்த அஸ்கிரிய பீட மகாநாயக்கவை நேற்று சந்தித்த பின்னர் பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார்.“கருணா அம்மான் என்பவர் புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இயங்க முடியாமல் தப்பியோடியவர். விடுதலைப் புலிகளிடம் ஊழல் மோசடிகளில் சிக்கி, பிரபாகரனினிடம் இருந்து உயிரை காப்பாற்றுவதற்காக தப்பி வந்த மனிதனாகும். பிரபாகரனுடன் ஒன்றாக வாழ்ந்த நபர் என்றாலும், அவரால் பிரபாகரனின் வீடு இருந்த இடத்தையேனும் கூறமுடியவில்லை. எங்கள் இராணுவத்தினர் தான் புதுக்குடியிருப்பில் வீட்டை கண்டுபிடித்தார்கள். அவரை வீரனாக்கியது மஹிந்த ராஜபக்ச தான்” என தமிழின அழிப்பில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
29 ஜனவரி 2017
26 ஜனவரி 2017
பொறுக்கி சு.சுவாமி பின்கதவால் ஓட்டம்!
தமிழர்களை 'பொறுக்கி' என்று விமரிசித்த பா.ஜ.க தலைவர் சுப்ரமணிய சாமி, தமிழர்களின் எதிர்ப்பைக் கண்டு பின்வாசல் வழியாக அரங்கத்திற்குள் ஓடினார். இந்தியப் பாரம்பரியமும் கலாச்சாரமும் என்ற தலைப்பில் பேசுவதற்காக சுப்ரமணியசாமி சியாட்டலுக்குக்கு வருகை தந்திருந்தார். தகவல் அறிந்த சியாட்டல் வாழ் தமிழர்கள் திரளாக திரண்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க குவிந்தனர்.அரங்கம் அமைந்துள்ள சமாமிஸ் நகர தென் கிழக்கு சாலையிலும், அரங்க வாசலிலும் பதாகைகளுடன் முழக்கமிட்டவாறே நின்று கொண்டிருந்தனர். இன்னும் சிலர் பார்வையாளர்கள் போல் அரங்கத்திற்குள் சென்று விட்டனர். அங்கும் வெவ்வேறு வாசல்களில் மறியல் செய்யத் தயாராக இருந்தனர். வெளியே தமிழர்களின் போராட்ட முழக்கங்களைப் பார்த்த விழாக்குழுவினர், சுப்ரமணியசாமியை ஒரு பழைய காரில் யாருக்கும் தெரியாத வகையில் அழைத்து வந்தனர். ஆனாலும் அதைக் கவனித்து விட்ட தமிழர்கள் எல்லோருக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் முழக்கமிட்டனர்."நாங்கள் தமிழர்கள்.. நாகரீகம் மிக்கவர்கள் தமிழனம் தொன்மையானது தமிழர் நாகரீகம் மேன்மையானது நாகரீகம் தெரியாத 'பொறுக்கி' சுப்ரமணிய சாமியே திரும்பிப் போ நாகரீகம் தெரியாதவர் இந்தியப் பாரம்பரியம் பற்றிப் பேசுவதா " போன்ற முழக்கங்களை ஆங்கிலத்தில் உரக்கக்கூவிய படி முன்னேறினார்கள். நிலைமையை உணர்ந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் வந்து என்னவென்று கேட்டார்கள். தமிழனத்தை தரக்குறைவாக பேசியவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்துள்ளோம் என்றவுடன், அமைதியாக போராடுங்கள் என்று கூறி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். அமெரிக்காவில் தமிழர்களின் எதிர்ப்பை சற்றும் எதிர்ப்பார்க்காத சுப்ரமணியசாமி பதற்றமடைந்து விட்டார். அரங்க வாசலிலும் தமிழர்கள் குழுமியிருந்ததைப் பார்த்த விழாக்கமிட்டியினர் அவரைப் பின்வாசல் வழியாக அரங்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.சுப்ரமணிய சாமி பேசும் வரை அமைதியாக அரங்கத்திற்குள் இருந்த தமிழர்கள், அவர் பேச ஆரம்பித்ததும் கைத்தட்டி ஆரவாரம் செய்து கவனத்தை திருப்பினார்கள். அதைப் பார்த்த சுப்ரமணிய சாமி, பேச்சை நிறுத்தி சத்தம் வந்த திசையைப் திரும்பிப் பார்த்தார். உடனே, அனைவரும் 'நாங்கள் தமிழர்கள், தமிழர்களை இழிவாக பேசியதைக் கண்டித்து வெளி நடப்பு செய்கிறோம், தமிழர்கள் வாழ்க, தமிழ் வாழ்க என்று முழக்கமிட்டனர். வெளியே வந்த தமிழர்கள், நிகழ்ச்சி முடியும் வரையிலும் காத்திருந்தனர். தமிழர்கள் போய்விட்டனர் என்று நம்பி வந்த சுப்ரமணிய சாமி மீண்டும் தமிழர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்.அங்கிருந்து ஒரு தமிழ்ப் பெண் மிகவும் ஆவேசத்துடன், "தமிழர்களை எப்படி பொறுக்கி என்ற சொல்லலாம். எங்கள் தமிழக இளைஞர்களின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் பார்த்தீர்களா? என் அண்ணன் தம்பிகளையை பொறுக்கி என்று பேச உங்களுக்கு யார் உரிமை தந்தார்கள். நாகரீகமாக பேசத் தெரியாத நீங்களா இந்தியக் கலாச்சாரம் பற்றி பேசுகிறீர்கள்," என்று ஆங்கிலத்தில் உரத்த குரலில் முழங்கினார். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடுமோ என்று பதறிய விழாக்குழுவினர் சுப்ரமணிய சாமியை விரைவாக அழைத்துச் சென்று விட்டனர். மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் என கடும் குளிராக இருந்த போதிலும் குழந்தைகளுடன் குடும்பமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு விட்டனர். இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் அங்கேயே இருந்து, சுப்ரமணிய சாமி திரும்பிப் போகும் வரையிலும் போராட்டம் நடத்தியுள்ளனர். கைக் குழந்தை ஒருவர் தமிழன் டா என்ற பதாகையுடனும், அடுத்தவன் பொண்டாட்டிக்கு தாலி கட்டினவனுக்கு ஹார்வர்ட் ஒரு கேடா போன்ற பதாகைகளையும் தமிழில் வைத்திருந்தனர்.மேலும் ஆங்கில வாசங்களுடனும் பல பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். சியாட்டல் தமிழர்களின் இந்த திடீர்ப் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
24 ஜனவரி 2017
வடமராட்சி இளைஞர் ஆபிரிக்காவில் அடித்துக்கொலை!
சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வருடம் புறப்பட்டுச் சென்ற கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ம.ரவிசங்கர் என்ற இளைஞன், மேற்கு ஆபிரிக்காவில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான சியாராலியோனிலேயே இந்தக கொலை இடம்பெற்றுள்ளது.யுத்தத்தின் போது, காலொன்றை இழந்த இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக முகவரொருவர் மூலம் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ளார். இவர்களை அழைத்துச் சென்ற முகவர், ஆபிரிக்காவின் கடற்கரைப் பிரதேசத்தில் இவர்களைத் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, கடந்த 3 நாட்களுக்கு முன் குறித்த இளைஞன் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த இளைஞனின் நண்பர், கரவெட்டியிலுள்ள அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவ்விளைஞன் உயிரிழந்துள்ளதாக பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். குறித்த இளைஞன் போன்று பல இளைஞர்கள் அம்முகவரினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து வருவதாக குறித்த பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்த சுப்பையா சண்முகம் ஆகியோருக்கு 16 இலட்சம் ரூபாய் பணம் வழங்கியே தமது மகன் சுவிற்ஸர்லாந்துக்கு செல்வதற்காக ஆபிரிக்காவுக்கு சென்றுள்ளார். மேலும் பணம் கேட்டு மகனை துன்புறுத்தியதால் அவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவனை தாக்கிக் கொன்று விட்டார்கள். மேலும் தற்போது 15 இலட்சம் ரூபாய் பணம் தந்தாலே அவனுடைய சடலத்தைத் தருவோம். அல்லாவிட்டால் தரமாட்டோம் என தற்போது எம்மை மிரட்டுகின்றனர் என்று இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

23 ஜனவரி 2017
வெட்ட வெளிச்சமான தமிழ்நாடு பொலிஸாரின் வன்முறை வெறியாட்டம்!
மிகவும் கேவலமான முறையில் தமிழ்நாடு பொலிஸ் நடந்துகொண்டிருக்கிறது.தமிழக மாணவர்களின் அமைதி வழிப்போராட்டம் உலகத்திற்கே அறப்போர் என்றால் இதுதான்
என்பதை உணர்த்தி தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்திருக்கும் இத்தருணத்தில்,உலகிலேயே மிகவும் கேவலமான காவல்துறை தமிழக காவல்துறைதான் என்பதும் இன்றைய தினம் பதிவாகி இருக்கிறது.மக்கள் மீது கற்கள்,பொல்லுகள் கொண்டு தாக்குவதும்,வீடுகள்,கட்டிடங்கள்,வாகனங்கள் எரியூட்டப்படுவதும்,கர்ப்பிணிப்பெண்கள்,மூதாளர்கள் என்று கூட பாராமல் அவர்களையும் தாக்கி மிகவும் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு பொலிஸ்.மாபெரும் வன்முறையை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு மாணவர்கள் மீது பழியைப்போட போட முற்பட்டு மானம்கெட்டுப் போய் நிற்கிறது தமிழ்நாடு பொலிஸ்.பொலிஸார் வன்முறையில் ஈடுபடும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் காணொளி ஆதாரங்களாக வெளியாகி உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாக புகைப்படம் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.இளம் பெண்கள்மீது பாலியல் வெறியாட்டங்களிலும் இந்த காடைக்கூட்டம் ஈடுபட்டதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

21 ஜனவரி 2017
உயிரையும் கொடுக்க தயார்-ஜனநாயக போராளிகள் கட்சி!
தமிழ் மக்களுக்காக உயிரையும் கொடுக்க எமது அணி தயாராக இருக்கின்றது என ஜனநாயகப் போராளிகளின் கட்சி செயலாளர் இரா. கதிர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- கல்லடி வெய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலைய மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்-
”கடந்த கால கசப்பான அனுபவங்களை ஓர் படிப்பினையாக எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் நாம், சொகுசு வாகனங்களும் சுகபோக வாழ்க்கைக்கும் அடிமையானவர்களிடம் இனிமேலும் ஏமாறத் தயாரில்லை என்பதனை இடித்துரைக்க கடமைப்பட்டுள்ளோம். எம் அன்பு உறவுகளே நாம் ஒன்றிணைவோம். எம் தமிழ் இன துரோகிகளை வீட்டுக்கு அனுப்புவோம். உங்களுக்காக உயிரையும் கொடுக்க எமது அணி தயாராகவே உள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வித்துக்களை எம் மண்ணில் விதைத்துள்ளோம். இவ் விதைகள் துளிர்விடும் காலம் மலர்ந்துள்ளது. அதன் விழுதுகளாக நாமிருப்போம்.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தலாம். போராளிகள் என்பவர்கள் பெறுமதியானவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு இணக்கப்பாட்டடை ஏற்படுத்தி அதனூடாகத்தான் நிலையான சமாதானத்தை உருவாக்கவேண்டும். அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு எங்களுடைய அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாக அடுத்த கட்ட நகர்வை ஏற்படுத்துவோம்” என இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

09 ஜனவரி 2017
வேலணையில் மாணவி நீரில் மூழ்கி மரணம்!
வேலணை கிழக்கு மகாவித்தியாலய மாணவி குளத்தில் மூழ்கி சாவடைந்துள்ளார்.
வேலணைமேற்கு 6ம் வட்டாரம் நாவலர் சனசமூக நிலையத்திற்கு அண்மையில் வசித்துவரும் சுரேஸ் அவர்களின் மகள் வினோதா (வயது 17) என்பவர் இன்று காலை10.45மணியளவில் தனது தாயார் சகோதரிகள் மற்றும் மைத்துனியார் உடன் சேர்ந்து வீட்டுக்கு அயலிலுள்ள சங்கத்தார் கேணிக்குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி சாவடைந்துள்ளார்.
இவர் வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தில்கல்வி கற்று 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் கா.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:முகநூல்-வேலணை மண்ணின் மைந்தர்கள்.

05 ஜனவரி 2017
கொளத்தூர் மணியை சந்தித்த ஸ்டாலின்,அதிர்ச்சியான வீரமணி!
ஸ்டாலினுடன் கொளத்தூர் மணி |
ஸ்டாலினுடன் வீரமணி |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)