வேலணை கிழக்கு மகாவித்தியாலய மாணவி குளத்தில் மூழ்கி சாவடைந்துள்ளார்.வேலணைமேற்கு 6ம் வட்டாரம் நாவலர் சனசமூக நிலையத்திற்கு அண்மையில் வசித்துவரும் சுரேஸ் அவர்களின் மகள் வினோதா (வயது 17) என்பவர் இன்று காலை10.45மணியளவில் தனது தாயார் சகோதரிகள் மற்றும் மைத்துனியார் உடன் சேர்ந்து வீட்டுக்கு அயலிலுள்ள சங்கத்தார் கேணிக்குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி சாவடைந்துள்ளார்.
இவர் வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தில்கல்வி கற்று 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் கா.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:முகநூல்-வேலணை மண்ணின் மைந்தர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக