புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஊழல் மோசடியில் சிக்கி உயிரைக் காப்பாற்ற தப்பியோடி வந்தவர் தான் கருணா என்று சிறீலங்காவின் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மல்வத்த அஸ்கிரிய பீட மகாநாயக்கவை நேற்று சந்தித்த பின்னர் பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார்.“கருணா அம்மான் என்பவர் புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இயங்க முடியாமல் தப்பியோடியவர். விடுதலைப் புலிகளிடம் ஊழல் மோசடிகளில் சிக்கி, பிரபாகரனினிடம் இருந்து உயிரை காப்பாற்றுவதற்காக தப்பி வந்த மனிதனாகும். பிரபாகரனுடன் ஒன்றாக வாழ்ந்த நபர் என்றாலும், அவரால் பிரபாகரனின் வீடு இருந்த இடத்தையேனும் கூறமுடியவில்லை. எங்கள் இராணுவத்தினர் தான் புதுக்குடியிருப்பில் வீட்டை கண்டுபிடித்தார்கள். அவரை வீரனாக்கியது மஹிந்த ராஜபக்ச தான்” என தமிழின அழிப்பில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.29 ஜனவரி 2017
ஊழல் செய்து புலிகளிடமிருந்து தப்பி வந்தவர்தான் கருணா!
புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஊழல் மோசடியில் சிக்கி உயிரைக் காப்பாற்ற தப்பியோடி வந்தவர் தான் கருணா என்று சிறீலங்காவின் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மல்வத்த அஸ்கிரிய பீட மகாநாயக்கவை நேற்று சந்தித்த பின்னர் பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார்.“கருணா அம்மான் என்பவர் புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இயங்க முடியாமல் தப்பியோடியவர். விடுதலைப் புலிகளிடம் ஊழல் மோசடிகளில் சிக்கி, பிரபாகரனினிடம் இருந்து உயிரை காப்பாற்றுவதற்காக தப்பி வந்த மனிதனாகும். பிரபாகரனுடன் ஒன்றாக வாழ்ந்த நபர் என்றாலும், அவரால் பிரபாகரனின் வீடு இருந்த இடத்தையேனும் கூறமுடியவில்லை. எங்கள் இராணுவத்தினர் தான் புதுக்குடியிருப்பில் வீட்டை கண்டுபிடித்தார்கள். அவரை வீரனாக்கியது மஹிந்த ராஜபக்ச தான்” என தமிழின அழிப்பில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக