04 ஜனவரி 2018

மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுகள்!

யாழ்ப்பாணம், வடமராட்சியில் ஜி. ஜி. பொன்னம்பலம், அழகுமணி மண இணையருக்கு 12.08.1940ல் மகனாகப் பிறந்தவர் குமார்.இவருக்கு ஒரு சகோதரியும் உண்டு.யாழ்ப்பாணம் அரச அதிபராக இருந்த முருகேசம்பிள்ளை என்பவரின் மகள் யோகலட்சுமியை மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்.தந்தையைப் போலவே இவரும் சட்டம் பயின்று பாரிஸ்டர் ஆகி வழக்கறிஞராகப் பணியாற்றினார்.1966 ஆம் ஆண்டு முதல் தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம், 1977 ஆம் ஆண்டில் தந்தை ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் இறந்த பின்னர் அக்கட்சியின் தலைவரானார்.
தெற்கில் இருந்துகொண்டே  தமிழ் மக்களின் உரிமைகளுக்காக துணிவோடு போராடி வந்தார். அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடினார். எவ்விடத்திலும், தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களைத் துணிவாக வெளியிட்டு வந்தார்.ஐ.நா.வில் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களுக்கு முன்பே குரல் கொடுத்தவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது.சிறந்த சட்டவாளரான இவரது துணிச்சலான செயற்பாடுகளால் சிங்கள இனவாதிகள் பெரும் சீற்றம் கொண்டனர்.சிங்கள இன வெறியின் உச்சக் கட்டமாக சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் சூழ்ச்சியால் வரவழைக்கப்பட்டு கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் 05.01.2000மாம் ஆண்டு மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவரை மாமனிதராக தமிழீழ விடுதலைப் புலிகள் கௌரவித்தனர்.மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களுடைய புதல்வர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தந்தை வழியில் அரசியல் ரீதியாக தொடர்ந்து போராடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக