29 ஜனவரி 2018

அபிவிருத்திக்கான நிதியெனில் சம்பந்தனும் சிறீதரனும் ஏன் அதை பெறவில்லை?சுரேஷ் கேள்வி!


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ள பணம் அபிவிருத்திக்கானது என இரா.சம்பந்தன் கூறுகின்றார். >எனினும், நானும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அந்த நிதியினை பெற்றுக்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சவால் விடுகின்றார். உண்மையிலேயே இது அபிவிருத்திக்கான நிதியென்று கூறுவதாக இருந்தால் இரா.சம்பந்தனும், சிறீதரனும் ஏன் அந்த நிதியை பெற்றுக்கொள்ளவில்லை என சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ள பணம் அபிவிருத்திக்கானது என இரா.சம்பந்தன் கூறுகின்றார்.எனினும், நானும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அந்த நிதியினை பெற்றுக்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சவால் விடுகின்றார். உண்மையிலேயே இது அபிவிருத்திக்கான நிதியென்று கூறுவதாக இருந்தால் இரா.சம்பந்தனும், சிறீதரனும் ஏன் அந்த நிதியை பெற்றுக்கொள்ளவில்லை என சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுரேஸ் பிரேமசந்திரன் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“இரா.சம்பந்தன் இந்த நிதியை பெற்றுக்கொள்ளாவிட்டால் ஏன் இந்த நிதியை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.நாங்கள் இந்த நிதியை பெற்றுகொள்ளவில்லை என சிறீதரன் கூறுகின்றார். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் உள்ளிட்டவர்கள் நிதியை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.வரவுசெலவு திட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையின் காரணமாகவே கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. வாக்களிக்காதவர்களுக்கு இந்த நிதி கொடுக்கப்படவில்லை. வாக்களித்தவர்களுக்கு மட்டும்தான் இந்த நிதி கொடுக்கப்படுகின்றது என்றால் இதனை ஒரு அரசியல் லஞ்சமாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கின்றது? என அவர் இதன் போது கேள்வியெழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக