சுராங்கனி புகழ், பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் சென்னை- திருவான்மையூர், கந்தன்சாவடியில் நேற்றிரவு 7.20 மணியளவில் காலமானார். இலங்கையில் பொப்பிசைத்துறையில் பிரபல்யமான பாடகராகத் திகழ்ந்த இவர், இலங்கையின் தமிழ் பொப்பிசையை உலக அளவில் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார்.
இவரது சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா... என்ற பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார். பொப்பிசைத்துறை மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் கால்பதித்திருந்தார். இவருக்கு இலங்கை மட்டுமன்றி தமிழகம் உள்ளிட்ட உலகில் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் இரசிகர்கள் உள்ளனர்.இவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களிலே நடித்தும் பாடியும் வந்தார். தமிழ், ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள மனோகர் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை சென்னையில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக