29 ஏப்ரல் 2016

தமிழகத்தில் 130 வயதிற்கு மேற்பட்ட 28 வாக்காளர்கள்!

தமிழகத்தில் 130 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 28 பேர் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் வசிக்கும் அதிக வயதுள்ள வாக்காளர்களின் பட்டியல் தனியாக தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 627 பேர் உள்ளனர். மேலும் 130 வயதிற்கு மேற்பட்டவர்கள் 28 பேர் உள்ளனர்.வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு தினத்தன்று வரிசையில் நின்று வாக்களிக்கத் தேவையில்லை. அவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 100 வயதிற்கு மேற்பட்டவர்களின் விபரம் வருமாறு, வேலூர் - 597,கோவை-440,சென்னை-434,திருப்பூர்-403, நெல்லை-359,விழுப்புரம்-355,காஞ்சிபுரம்-339,சேலம்-328,ஈரோடு-311,திண்டுக்கல்-306,திருவண்ணாமலை-303, கிருஷ்ணகிரி-282,திருச்சி-277,தஞ்சாவூர்-261,திருவள்ளூர்-260,தருமபுரி-230,கடலூர்-217,கன்னியாகுமரி-212, விருதுநகர்-190,மதுரை-183,நாகப்பட்டினம்-168,ராமநாதபுரம்-166,தூத்துக்குடி-154,சிவகங்கை-149,தேனி-145,புதுக்கோட்டை-130,திருவாரூர்-120-நாமக்கல்-113,அரியலூர்-64,பெரம்பலூர்-48,நீலகிரி-45,கரூர் 38.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக