வட்டக்கச்சியில் இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் பெண் ஒருவர் இன்று பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வடக்கச்சி 10வது வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா (வயது 24) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு ஏழு மற்றும் ஒன்றரை வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளனர்.பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளியே சென்றுள்ளார். சடங்கு நிகழ்வு ஒன்றுக்கு அயலவர்களும் சென்றிருந்த வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்புறமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை குற்றத்தடயவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.14 பிப்ரவரி 2018
வட்டக்கச்சியில் இளம் பெண் படுகொலை!
வட்டக்கச்சியில் இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் பெண் ஒருவர் இன்று பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வடக்கச்சி 10வது வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா (வயது 24) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு ஏழு மற்றும் ஒன்றரை வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளனர்.பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளியே சென்றுள்ளார். சடங்கு நிகழ்வு ஒன்றுக்கு அயலவர்களும் சென்றிருந்த வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்புறமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை குற்றத்தடயவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக