தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வைகோவை சிங்களர்கள் மிரட்டிய நிலையில் அவருக்கு ஐ.நா சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய வைகோ, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார்.மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் தமிழ் ஈழ தேசத்தை அமைக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கூட்டத்தில் உரையாற்றிவிட்டு வெளியே வந்த வைகோவை சிங்களப் பெண் ஒருவர் வழிமறித்து அவரை திட்டியுள்ளார். பின்னர் அவருடன் சேர்ந்து வந்த சில சிங்களர்கள் அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வைகோவை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு தனக்கு உரிமை உள்ளது என்று வைகோ வாதாடினார். பிரச்சினை முற்றிய நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் வைகோவை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விட்டுள்ளனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் 90 ஆயிரம் விதவைகள், காணாமல் போன கணவன், தந்தையை தேடி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள்.210 நாட்களாக பெண்கள் கிளிநொச்சியல் உண்ணாவிரதம்இருக்கிறார்கள். எங்கள் மக்கள் அழிக்கப்பட்டு எங்கள் இனமே அழிக்கப்படும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. 2015 தீர்மானத்தை ஏற்கவேண்டியதில்லை என்று ரணில் விக்ரமசிங்கேயும் மைத்ரிபாலா சிறிசேனாவும் சொல்கிறார்கள். எனவே, மனித உரிமை ஆணையம் இதனை ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அனுப்பி அவர் நேரடியாக இலங்கை வந்து பார்வையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று பேசினேன். இதற்கு சிங்களப் பெண் ஒருவர் திட்டினார். போர்க்குற்றத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் வீரசேகரா தலைமையிலான சிங்களர்களே தகராறு செய்தனர். நீங்கள் தற்கொலை தீவிரவாதிகள், கொலைகாரர்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நானும் பதில் பேசினேன். ஆனால், அவர்கள் பிரச்சினை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே வந்துள்ளனர். நான் பேசுவதை மட்டுமே வீடியோவில் பதிவு செய்தனர் என்று வைகோ சொன்னார். ஜெனிவாவில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தமிழ் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.26 செப்டம்பர் 2017
சிங்களவர்களின் மிரட்டலால் வைகோவிற்கு ஐ.நா.பாதுகாப்பு!
தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வைகோவை சிங்களர்கள் மிரட்டிய நிலையில் அவருக்கு ஐ.நா சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய வைகோ, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார்.மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் தமிழ் ஈழ தேசத்தை அமைக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கூட்டத்தில் உரையாற்றிவிட்டு வெளியே வந்த வைகோவை சிங்களப் பெண் ஒருவர் வழிமறித்து அவரை திட்டியுள்ளார். பின்னர் அவருடன் சேர்ந்து வந்த சில சிங்களர்கள் அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வைகோவை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு தனக்கு உரிமை உள்ளது என்று வைகோ வாதாடினார். பிரச்சினை முற்றிய நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் வைகோவை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விட்டுள்ளனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் 90 ஆயிரம் விதவைகள், காணாமல் போன கணவன், தந்தையை தேடி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள்.210 நாட்களாக பெண்கள் கிளிநொச்சியல் உண்ணாவிரதம்இருக்கிறார்கள். எங்கள் மக்கள் அழிக்கப்பட்டு எங்கள் இனமே அழிக்கப்படும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. 2015 தீர்மானத்தை ஏற்கவேண்டியதில்லை என்று ரணில் விக்ரமசிங்கேயும் மைத்ரிபாலா சிறிசேனாவும் சொல்கிறார்கள். எனவே, மனித உரிமை ஆணையம் இதனை ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அனுப்பி அவர் நேரடியாக இலங்கை வந்து பார்வையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று பேசினேன். இதற்கு சிங்களப் பெண் ஒருவர் திட்டினார். போர்க்குற்றத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் வீரசேகரா தலைமையிலான சிங்களர்களே தகராறு செய்தனர். நீங்கள் தற்கொலை தீவிரவாதிகள், கொலைகாரர்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நானும் பதில் பேசினேன். ஆனால், அவர்கள் பிரச்சினை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே வந்துள்ளனர். நான் பேசுவதை மட்டுமே வீடியோவில் பதிவு செய்தனர் என்று வைகோ சொன்னார். ஜெனிவாவில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தமிழ் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.17 செப்டம்பர் 2017
கள்ளிச் செடி கூட எங்க ஊரில் வளரும்.. பாஜக வளரவே வளராது:சீமான்
தமிழகத்தில் கள்ளிச் செடி கூட வளரும்.. பாஜக வளரவே வளராது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:பாஜக தேசிய செயலாளர் ராஜா, நான் சாரணர் இயக்கத்தின் முன்னாள் மாணவர்; நான் பொறுப்புக்கு வந்தால் தேசப்பற்று, ஒழுக்கத்தை கற்பிப்பேன் என்றார்.ஆனால் உங்க ஒழுக்கமும் பற்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். 51 ஓட்டுகள்தான் வாங்கியிருக்கிறார். அவரை எதிர்த்து நின்ற மணி 236 ஓட்டுகள் வாங்கியிருக்கிறார். இதுதான் உங்க நிலைமை.தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு வருகிறது என்கிறார்கள்... எங்க வளருது? கள்ளிச்செடி கூட எங்க ஊரில் வளரும். பாஜக வளரவே வளராது.இவ்வாறு சீமான் கூறினார்.
01 செப்டம்பர் 2017
நீட் தேர்வால் ஏமாற்றம் மாணவி அனிதா தற்கொலை!
அரியலூரை சேர்ந்த அனிதா மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் அனிதா. ப்ளஸ் டூ தேர்வு அடிப்படையில் அனிதாவின் கட் ஆப் மதிப்பெண் 196.5 ஆகும். நீட் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண்களே பெற்றிருந்தார் அனிதா, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து நன்றாக படித்தவர் அனிதா. அவர் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீட் தேர்வு அடிப்படையிலேயே கவுன்சிலிங் நடைபெற்றது.இதனால் விரக்தியடைந்த அனிதா,தன்னுடைய மருத்துவ கனவு கலைந்து போனதாக உறவினர்களிடம் கூறி வந்துள்ளர். இந்த நிலையில் மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்காத காரணத்தால் விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவரது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அதேவேளை,மாணவர்களும் போராட்டங்களில் குதித்துள்ளனர்.பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்தெழலாம் என நம்பப்படுகிறது.28 ஆகஸ்ட் 2017
வித்தியா படுகொலைக்கு கடற்படைதான் காரணம்-சசீந்திரன்
கடற்படையினரே புங்குடுதீவு மாணவி வித்தியாவை வன்கொடுமைக்கு உள்ளாகிக் கொலை செய்துள்ளனர் என்று தீர்ப்பாயத்தில் தெரிவித்தார் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான ம.சசீந்திரன். இவர் இந்தக் கொலை வழக்கின் மற்றோரு சந்தேகநபரான சுவிஸ்குமாரின் தம்பியாவார்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணை செய்யப்படுகின்றது. வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று எதிரித் தரப்பினரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதில் இன்று சாட்சியமளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
சாரதாம்பாள், தர்சினி கொல்லப்பட்ட சம்பவங்களில் கடற்படையினர் ஏற்கனவே இவ்வாறு செய்துள்ளனர். இந்தக் கொலையும் கடற்படையினரே செய்துள்ளனர். அதை மறைக்கவே எம்மைக் கைது செய்துள்ளனர். ஊர் முழுக்க அறிவித்து எமக்கு எதிரான எண்ணப்பாட்டை உருவாக்கிவிட்டனர். சமூக வலைத் தளங்களிலும், ஊடகங்களிலும் எமது படங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தியுள்ளனர். அதனால் எங்கள் குடும்பம் நஞ்சருந்தி இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நாம் இந்தக் குற்றத்தைச் செய்யாததாலேயே உயிரோடு இருக்கின்றோம் என்று அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
27 ஆகஸ்ட் 2017
தமிழர் தெரு விழாவில் கனடிய பிரதமர் உரை!
அவர் மேடையில் உரையாற்றும் போது கனடாவின் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினராக திரு ஹரி ஆனந்தசங்கரியும் உடனிருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றிய பின்னர் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கா பிரதமர் விடைபெற்றார்.
இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் இந்த தமிழர் தெருவிழா இடம்பெறும். நூற்றுக்கணக்கான தமிழ்ர் வர்த்தக நிலையங்களும் பிரதான வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தஙகள் வர்த்தகச் சாவடிகளை இங்கு அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி:கனடா உதயன் செய்திப் பிரிவு
22 ஜூலை 2017
வானில் இருந்து விழுந்த திரவத்தால் மாணவிகள் பாதிப்பு!
வானத்தில் இருந்து விழுந்த மஞ்சள் நிற திரவம் உடலில் பட்டதால் யாழ்ப்பாண நகரில் உள்ள வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 18 பேர் மயக்கமடைந்தனர். இவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மாணவிகள் மைதானத்தில் நின்றிருந்த வேளையில் வானிலிருந்து விழுந்த ஒருவகை திரவம்பட்டே 18 மாணவிகள் பாதிக்கப்பட்டனர். மதிய இடைவேளையின்போது மாணவர்கள் மைதானத்தில் நின்றிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, மஞ்சள் நிற திரவமொன்று வானிலிருந்து வீழ்ந்ததாக பாடசாலை மாணவிகள் குறிப்பிட்டனர். குறித்த திரவம் மாணவிகளின் உடலில்பட்ட நிலையில் அவர்களது கைகள் சிவந்துள்ளன. அதனை தொடர்ந்து பாடசாலைக்கு வந்த சுகாதார வைத்திய அதிகாரி மாணவர்களை பார்வையிட்டதுடன், உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பணித்துள்ளார். இந்நிலையில், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
18 ஜூலை 2017
மரணத்தை ஏமாற்றிய மனிதன்!
![]() |
| காப்பாற்றிய காவல்துறையினருடன் |
மாரடைப்பினால் நாடித் துடிப்பு நின்று போயிருந்த ஒருவருக்கு 40 நிமிடங்கள் தொடர்ந்து முதலுதவி செய்து அவரை மரணத்தின் பிடியிலிருந்து மருத்துவமனையின் அவசரப்பிரிவு ஊழியர்கள் இருவர் மீட்டுள்ளனர் .
கடந்த ஜுன் 26-ஆம் தேதி தனது வீட்டில் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்த அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த 36 வயதான ஜான் ஆக்பர்னுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.இது குறித்து அவசரப்பிரிவு எண்ணான 911-க்கு தெரிவிக்கப்பட்டதும் , மூன்று குழந்தைகளின் தந்தையான ஆக்பர்னின் வீட்டிற்கு உடனடியாக வந்த இரண்டு காவல்துறையினர் அவருக்கு சி.பி.ஆர் (Cardiopulmonary resuscitation) எனப்படும் இதயத்தை இயங்க வைக்கும் முதலுதவி முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அவருடைய நாடித்துடிப்பு மீண்டும் வரும் வரை சுமார் 42 நிமிடங்கள் அவர்கள் இருவரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சி.பி.ஆர் முதலுதவி செய்தும், பாதிக்கப்பட்டவருக்கு 20 நிமிடங்கள் வரை மீண்டும் நாடித்துடிப்பு வரவில்லை எனில் அந்த நபருக்கு மீண்டும் சி.பிஆர் முதலுதவி செய்வது அவசியமில்லை. ஆனால் சார்லெட்-மெக்லென்பர்க் காவல்துறை அதிகாரிகளான லாரன்ஸ் கைலர் மற்றும் நிக்கோலினா பஜிக் ஆகியோர் 40 நிமிடங்களுக்கு மேலாக சி.பி.ஆர் முதலுதவி செய்து ஆக்பர்னின் உயிரை காப்பாற்றியுள்ளது போற்றுதலுக்குரியது.
நான் நலமாக இருக்கிறேன்`:
நாடித்துடிப்பு வந்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஆக்பர்ன், விரைவில் குணமடைவதற்காக மருத்துவர்களால் ஒரு வாரத்திற்கு கோமா நிலையில் வைக்கப்பட்டார்.
மீண்டும் பணிக்கு செல்வதை எளிதாக்குவதற்காக, இன்னும் ஆறு மாதங்கள் அவர் வாகனங்களை இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மார்பில் உள்ள புண்களைத் தவிர, தான் முழுமையான குணமடைந்துவிட்டது போல உணர்வதாக அவர் கூறியுள்ளார்.
`என்னுடைய இரண்டாவது வாழ்க்கையை எப்படி சிறப்பாக உருவாக்கிக் கொள்வது என யோசித்து வருகிறேன். அவர்களுடைய பணியையும் தாண்டி என்னை காப்பாற்ற முயற்சி எடுத்து, என்னுடைய ஒவ்வொரு நாளையும் வாழ எனக்கு வாய்ப்பளித்துள்ள அவர்களுக்கு கடன்பட்டுள்ளேன்.` என ஆக்பர்ன் தெரிவித்துள்ளார்.
தங்க நிமிடங்கள்:
இதயத்துடிப்பு நின்ற ஒருவருக்கு உடனடியாக சி.பி.ஆர் முதலுதவி செய்யப்படவில்லை என்றால் அடுத்த ஒவ்வொரு நிமிடமும் அவர் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு 10 சதவீதம் குறைவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.` என அலபாமா பல்கலைகழகத்தின் மருத்துவ கல்வித்துறை இணைப் பேராசிரியரான மைக்கேல் குர்ஸ் தெரிவித்துள்ளார்.
`வடக்கு கரோலினாவில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், சி.பி.ஆர் முதலுதவி உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதை உணர்த்துகிறது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டர்களுக்கு உடனடியாக அளிக்கப்படும் சி.பி.ஆர் சிகிச்சை, அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை மும்மடங்காக்குகிறது.பெரும்பாலான அமெரிக்க பணியாளர்கள் திடீரென ஏற்படும் மாரடைப்பை கையாளத் தெரியாதவர்களாக இருக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.` என அவர் கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் 3,50,000க்கும் அதிகமானோர் அமெரிக்காவில் மாரடைப்பினால் பாதிக்கப்படுகின்றனர்.அவர்களில் 90 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். மருத்துவமனைக்கு வெளியில் மாரடைப்பால் பாதிக்கப்படும் 46 சதவீதம் பேர், மருத்துவ உதவிகள் கிடைப்பதற்கு முன்னர் வேறு எந்த வித முதலுதவியும் கிடைக்காததால் உயிரிழக்கின்றனர்.
நன்றி:பிபிசி தமிழ்
10 ஜூலை 2017
மணற்காட்டில் மக்கள் கொந்தளிப்பு!இரு பொலிஸார் கைதாம்!
வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துன்னாலையைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது இடுப்புக்கு மேற் பகுதியில் சூட்டுக்காயம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
“சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனவும் ஹன்ரர் ரக வாகனம் மணலுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அதன்பின்னரே முழுமையாக தகவல்களைத் தெரிவிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 10 நாள்களுக்கு முன்னரே வெளிநாட்டில் இருந்து வந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். நேற்று மதியம் உணவு உண்டுவிட்டு யாழ்ப்பாணம் சென்று வந்து மோட்டார் சைக்கிளை வீட்டில் நிறுத்திய அவர் வல்லிபுரம் கோயிலுக்குச் சென்று வருகின்றேன் என்று கூறிச் சென்றார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.அவர் மணல் கடத்தலில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் மீண்டும் வெளிநாடு செல்லவிருந்தார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். மந்திகை மருத்துவமனைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜீப் மீது ஆத்திரமடைந்த மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தினர். மந்திகை மருத்துவமனைப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதை அடுத்து காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மகாசிங்க, காங்கேசன்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட 50 பொலிஸாரும் அவர்களுடன் இரு வாகனங்களில் சிறப்பு அதிரடி படையினரும் மந்திகை ஆதார மருத்துவனைக்குச் சென்றனர்.
அதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெல்லியடியில் அமைந்துள்ள அவரது வீட்டின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டிலிருந்த பொருள்களையும் சேதப்படுத்தினர். சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் முகத்தை துணியால் மூடிக் கட்டியவாறு தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது.
துன்னாலையில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரண் ஒன்றும் இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்தன. அதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
03 ஜூலை 2017
மீண்டும் உதயமாகிறது நவம் அறிவுக்கூடம்!
வியட்னாமில் இருக்கின்ற அதிகமான பிச்சைக்காரர்கள் அந்தநாட்டின் விடுதலைக்காக போராடி விழுப்புண்அடைந்த போராளிகளே. அதேபோன்றதொரு நிலமை எமது இனத்தின் விடுதலைக்காக போராடுகின்ற போராளிகளுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே நாம் நவம் அறிவுக்கூடத்தை நிறுவுகின்றோம்.இன்றையகால அவசியத்தின் பொருட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சி தளத்திலும் புலத்திலும் இன்றும் தலைவரையும் போரளிகளையும் நேசிக்கும் உறவுகளின் பலத்துடனும் ஆசியுடனும் தாயகத்தில் நவம்அறிவுகூடத்தை 15-07-2017உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றோம்.ஊடகப்பிரிவு
ஜனநாயகபோராளிகள்கட்சி
தலைமைச்செயலகம்
கைவேலி புதுக்குடியிருப்பு
25 ஜூன் 2017
பக்கபலமாக இருந்த மக்களுக்கு முதல்வர் நன்றி தெரிவிப்பு!
நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால் தமிழ் மக்கள் நலன் கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன் கைகோர்த்து நிற்பதே என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனதினிய தமிழ் நெஞ்சங்களே!
அண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன.
முதலாவதாக என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்கின்றார்கள். உங்கள் உணர்வுகளின் வேகம் கண்டு மிரண்டுள்ளார்கள். என்னைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பதை உலகறிச் செய்துள்ளீர்கள்.
இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டி நான் நடந்து கொண்டு வரும் விதம், எடுத்து வந்த தீர்மானங்கள் ஆகியன சரியோ பிழையோ என்று சலனமுற்றிருந்த வேளையிலே தான் ‘ நீங்கள் போகும் பாதை சரி! நாமும் உங்களுடன் தான்’ என்று நம்பிக்கை ஒளி ஊட்டியுள்ளீர்கள்.
மூன்றாவதாக மக்கள் பலம் என்பதென்ன என்ற கேள்விக்கு விடையை உலகறியச் செய்து விட்டீர்கள்.
நான்காவதாக நந்தவனத்து ஆண்டிகளுக்கு நயமான பாடங்கள் புகட்டி விட்டீர்கள். போட்டுடைத்தவர்களை அடையாளம் காண அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கியுள்ளீர்கள்.
ஐந்தாவதாக தமிழர் அரசியல் பிரச்சினைகளை ‘ இந்தா அந்தா’ தீர்க்க வருகின்றோம் என்றவர்களுக்கு அவர்களின் 13 ஆம் திருத்தச் சட்ட அடிப்படையிலான தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற செய்தியை ஓங்கி உரைத்துள்ளீர்கள்.
ஆறாவதாக ஊழலுக்கு எம் மக்கள் எதிரானவர்கள் என்ற செய்தியை உலகறியச் செய்து விட்டீர்கள்.
இவ்வாறு பல செய்திகளை நீங்கள் உங்கள் எழுச்சியால் எடுத்தியம்பி விட்டீர்கள். என்னையும் உங்களுள் ஒருவனாக ஏற்றுள்ளீர்கள். தமிழ் மக்களின் எதிர்காலம் எங்கள் ஒவ்வொருவரினதும் கைகளில் என்பதை ஊரறிய உலகறியச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!
முக்கியமாக இளைஞர்களின் எழுச்சி என்னைப் பரவசம் கொள்ளச் செய்தது. எம்மவர்களின் அன்பு நெஞ்சங்களின் அரவணைப்பு மனதுக்கு இதமாய் அமைந்தது. அவர்களின் கரிசனையும் ஊக்குவிப்பும் என் கடமைகளை எனக்குணர்த்தின.
நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால் தமிழ் மக்கள் நலன் கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன் கைகோர்த்து நிற்பதே என்று நம்புகின்றேன்.
உங்கள் யாவருக்கும் இறைவனின் அருள் கிட்டுவதாக எனப் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனதினிய தமிழ் நெஞ்சங்களே!
அண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன.
முதலாவதாக என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்கின்றார்கள். உங்கள் உணர்வுகளின் வேகம் கண்டு மிரண்டுள்ளார்கள். என்னைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பதை உலகறிச் செய்துள்ளீர்கள்.
இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டி நான் நடந்து கொண்டு வரும் விதம், எடுத்து வந்த தீர்மானங்கள் ஆகியன சரியோ பிழையோ என்று சலனமுற்றிருந்த வேளையிலே தான் ‘ நீங்கள் போகும் பாதை சரி! நாமும் உங்களுடன் தான்’ என்று நம்பிக்கை ஒளி ஊட்டியுள்ளீர்கள்.
மூன்றாவதாக மக்கள் பலம் என்பதென்ன என்ற கேள்விக்கு விடையை உலகறியச் செய்து விட்டீர்கள்.
நான்காவதாக நந்தவனத்து ஆண்டிகளுக்கு நயமான பாடங்கள் புகட்டி விட்டீர்கள். போட்டுடைத்தவர்களை அடையாளம் காண அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கியுள்ளீர்கள்.
ஐந்தாவதாக தமிழர் அரசியல் பிரச்சினைகளை ‘ இந்தா அந்தா’ தீர்க்க வருகின்றோம் என்றவர்களுக்கு அவர்களின் 13 ஆம் திருத்தச் சட்ட அடிப்படையிலான தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற செய்தியை ஓங்கி உரைத்துள்ளீர்கள்.
ஆறாவதாக ஊழலுக்கு எம் மக்கள் எதிரானவர்கள் என்ற செய்தியை உலகறியச் செய்து விட்டீர்கள்.
இவ்வாறு பல செய்திகளை நீங்கள் உங்கள் எழுச்சியால் எடுத்தியம்பி விட்டீர்கள். என்னையும் உங்களுள் ஒருவனாக ஏற்றுள்ளீர்கள். தமிழ் மக்களின் எதிர்காலம் எங்கள் ஒவ்வொருவரினதும் கைகளில் என்பதை ஊரறிய உலகறியச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!
முக்கியமாக இளைஞர்களின் எழுச்சி என்னைப் பரவசம் கொள்ளச் செய்தது. எம்மவர்களின் அன்பு நெஞ்சங்களின் அரவணைப்பு மனதுக்கு இதமாய் அமைந்தது. அவர்களின் கரிசனையும் ஊக்குவிப்பும் என் கடமைகளை எனக்குணர்த்தின.
நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால் தமிழ் மக்கள் நலன் கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன் கைகோர்த்து நிற்பதே என்று நம்புகின்றேன்.
உங்கள் யாவருக்கும் இறைவனின் அருள் கிட்டுவதாக எனப் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
15 ஜூன் 2017
விக்னேஸ்வரன் மீது சூழ்ச்சி அரங்கேறுகிறது!
பன்னாட்டு சக்திகளின் சதியினால் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டம் முள்ளிவாய்க்காலில் குருதி தோய்ந்த காவியமாய் முடிவுரை எழுதப்பட்டு மக்கள் நிர்க்கதியாக நின்றவேளை தமிழ்மக்களின் உரிமைகளுக்காய் குரல்கொடுக்கவென தமிழ்மக்களின் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்ற ஒரு தனிப்பெருந் தலைமையாக தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே வடக்கின் முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன்.அரசு மக்களின் காணிவிவகாரம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இழுத்தடிப்பான ஓர் போக்கினைக் கடைப்பிடித்து வந்தபோது அரசிற்கு அழுத்தங்களைக் கொடுத்துவந்த ஒரேயொரு மக்கள் பிரதிநிதி விக்கினேஸ்வரன் அவர்களே!
மக்களின் கொள்கைகளை மனதில் நிறுத்தி அரசியல் பாதையில் மக்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக மீட்டெடுப்பதில் முழுமூச்சாகச் செயற்பட்ட இவரை, தென்பகுதி அடுத்த பிரபாகரன் என்றே வர்ணித்தது. சிறுபான்மையினரை அடிமைப்படுத்துவதில் பெருந்தடையாக இருந்த இவரை எவ்வழியில் வீழ்த்தலாம் என்பதில் எந்நேரமும் குறியாக இருந்த அரசு கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது நாட்டில் புலிகளை மீளவும் உருவாக்க முனைகின்றார் எனும் ஓர் குற்றச்சாட்டை இவர்மீது முன்வைத்து பௌத்த மதகுருக்களைத் தூண்டிவிட்டது. அதுவும் பயனற்றுப்போனது.
அடுத்தகட்டமாக விலைபோன சில தமிழ்த் தலைமைகளை வைத்து அரசு தனது நாடகத்தினை அரங்கேற்றி வலுவாக இருந்த தமிழரசுக்கட்சியிடையே ஓர் பிளவினை ஏற்படுத்தி அதனை வலுக்குன்றச் செய்துள்ளது.இதனால் மீண்டும் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
அரசிற்கு சிம்மசொப்பனமாக இருந்த வடக்கு மாகாணசபையில் இடம்பெற்ற ஊழலை எதிர்த்து அவ் ஊழல்ப் பேர்வழிகளை பதவிநீக்கம் செய்தமைக்காக இன்று ஓர் உன்னதமான, அரசியலில் அத்தனை தந்திரோபாயங்களையும் அறிந்து அதன்படி தமிழ்மக்களுக்கான அரசியல்த் தீர்வுக்கான ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்துவைத்த முதல்வரை அரசு விலைபோன சில தமிழ்த் தலைமைகளை வைத்து பதவியிலிருந்து நீக்கியுள்ளது. இங்குதான் மக்கள் விழிப்படையவேண்டிய கட்டாயமுள்ளது. இப்படியோர் தமிழின மீட்பரை அரசு திட்டமிட்டு சதியால் வீழ்த்தியதைக் கண்டும் மௌனம் காத்து மறுபடியும் அரசின் அடக்குமுறைக்குள் சிக்குண்டு நாதியற்று வாழ்வதா, இல்லை முதல்வரின் பின்னின்று நீதிக்காகக் குரல்கொடுத்து உரிமைகளை வென்றெடுத்து சுதந்திரமாக வாழ்வதா என்பதை முடிவுசெய்து புதிய வரலாற்றினை மக்கள் எழுத வேண்டுமென தமிழ்த்தாய் கண்விழிக்கின்றாள்.
தமிழ் இளைஞர்ளே!!!
முள்ளிவாய்க்காலில் தமிழனின் விடிவுக்காக பொராடியவர்களை துரோகம் எப்படி தோற்கடித்ததோ அதேபோல இன்று மற்றுமொரு துரோகம் நடந்து கொண்டிருக்க நாம் அனைவரும் வீடுகளில் படுத்துறங்கிங்கொண்டிருக்கிறோம். நாளை விடிந்ததும் எமக்காக பாடுபட்ட இன்னொரு மரமும் துரோகிகளால் வெட்டி சாய்க்கப்பட்டிருக்கும் வேதனையோடு கடந்து செல்லப்போகிறோமா? முடிவெடுங்கள் இளைஞர்கள் முடிவெடுத்தால் இயலாது என்று ஒண்றில்லை.
வடக்கில் உள்ள எல்லா மாகாணசபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்னால் ஒண்று கூடுங்கள் அவர்களை துரோகத்திற்கு துணைபோகவேிடாது தடுத்து நிறுத்துங்கள் உடனடியாக செயற்படுங்கள் இல்லையேல் நாளை ஒரு மாபெரும் துரோகத்தினை கண்டுகளித்த பார்வையாளராகிவிடுவீர்கள்..
-வடமாகாண இளைஞர் பேரவை-
05 ஜூன் 2017
இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி - மறுக்கிறது அரசாங்கம்!
இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன தெரிவித்துள்ளன. அண்மைக்காலமாக இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், பாகிஸ்தானிலிருந்து சதொச நிறுவனம் பிளாஸ்டிக் கலந்த பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய செய்தித் தளங்களில் பரவலான செய்தி பரப்பப்பட்டிருந்தது.எனினும் குறித்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று மறுக்கும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன, உரிய பரிசோதனைகளின் பின்னரே பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. அத்துடன் இவ்வாறான செய்திகள் பரவத் தொடங்கியதன் பின்னர் மீண்டுமொரு முறை குறித்த அரிசியை பரிசோதனைக் கூடமொன்றில் சமைத்து பரிசோதனைக்குட்படுத்திய போதிலும் எதுவித பிளாஸ்டிக் கலவைகளும் அடங்கியிருக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.எனவே பொதுமக்களின் நன்மை கருதி குறைந்த விலையில் இறக்குமதி செய்து விற்கப்படும் பாகிஸ்தான் பாஸ்மதி அரிசியை பொதுமக்கள் எதுவித அச்சமும் இன்றி பயன்படுத்தலாம் என்றும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன உறுதிப்படுத்தியுள்ளன.
02 ஜூன் 2017
கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு!
தமிழின் முதுபெரும் கவிஞரும், நக்கீரன் குழும இலக்கிய ஏடான இனிய உதயத்தின் நெறியாளருமான கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு எய்தினார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. செய்தி கேட்டு கவிஞர்களும், தமிழ் அன்பர்களும், இலக்கிய வாதிகளும், அவரது பனையூர் இல்லத்தை நோக்கி திரண்டு கொண்டிருக்கிறார்கள். அவரது இறுதி சடங்குகள் 03.06.2017 சனிக்கிழமை மதியம் 12 மணி அளவில் திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற உள்ளது. அண்மையில்தான் கவிக்கோ ரகுமானை, திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா திரைப்படத்திற்கு பாட்டெழுத அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்த அப்துல் ரகுமான் புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்துறை தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்.இவர் பால்வீதி, நேயர் விருப்பம் உள்ளிட்ட கவிதைகளையும், கரைகளே நதியாவதில்லை போன்ற பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். 1999-ம் ஆண்டு ஆலாபனை கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றிருந்தார். மேலும் இவர் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட 14 விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வென்றிருக்கிறார். ஹைக்கூ, கஜல் உள்ளிட்ட பிறமொழி இலக்கியங்களை தமிழில் புனைந்திருக்கிறார்.
இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர். இவரது முதல் கவிதை தொகுப்பு ‛பால்வீதி' 1974ம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார்.
தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற இவர், 1999ல் 'ஆலாபனை' கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வென்றார். கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.
நன்றி:நக்கீரன்
28 மே 2017
சட்டவாளர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி இன்று பிற்பகல் 1 மணியளவில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும். அப்பாத்துரை வினாயகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவராகவும் முன்னர் செயற்பட்டிருந்தார்.2000ஆம் ஆண்டு, 2001ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்டவர். அப்பாத்துரை வினாயகமூர்த்தியின் இறுதிச் சடங்கு யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மனித உரிமை செயற்பாட்டாளரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் நூற்றுக்கணக்கான மனித உரிமை மீறல் வழக்குகளுக்காக ஆயராகி வாதாடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவரின் இழப்பானது தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் பேரிழப்பாகும்.அன்னாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் தனது அகவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.09 மே 2017
மொன்றியலில் வெள்ளம்,இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது!
கனடாவில், மொன்றியல், கியுபெக் பகுதிகளில் வெள்ளம் அதிகரித்ததால் இராணுவத்தினர் அழைக்கப்பட்டிருப்பதுடன் மொன்றியலில் அவசர கால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மொன்றியலிற்கும் Île-Perrotற்கும் இடையில் Galipeault பாலம் மூடப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் மழை தொடர்ந்து பெய்ததால் அவசர கால நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளை மேற்கொள்வதற்கு 1,200 துருப்புக்கள் அனுப்பபட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மொன்றியலில் 179 குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மொன்றியல் Sacré-Coeur Hospital in Ahuntsic வைத்தியசாலையிலிருந்து 86 மனநோயாளர்கள் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
கியுபெக்கில் பல இடங்களில் போக்குவரத்து பாதைகள் மூடப்பட்டன. பிரதான பாலங்கள் போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளும் இயங்கவில்லை. மொன்றியலில் 100ற்கும் மேற்பட்ட நகராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கியு பெக்கிலும் 100ற்கும் மேற்பட்ட நகராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கியுபெக் பூராகவும் 146 நகராட்சிகள் வெள்ள மண்டலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டன. இப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கியுபெக்கின் மேற்கு பகுதிகளான றிகாட் கற்ரினோ மற்றும் ஹட்சன் பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
04 மே 2017
ரொறன்றோவிற்கு காலநிலை எச்சரிக்கை!
தேசிய காலநிலை உதவி மையம் காலநிலை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ரொறொன்ரோ பெரும்பாகம் உட்பட்ட இடங்களில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பிக்கும் மழை ஞாயிற்றுகிழமை வரை தொடரும். வியாழக்கிழமை கிட்டத்தட்ட 10-15 மில்லி மீற்றர்கள் வரை மழை பெய்யலாம் என வானிலை கணிப்பு கூறுகின்றது. மழையின் பெரும்பகுதி வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கப்படுகின்றது.ஒரு மாதத்தின் மதிப்புள்ள மழை மே மாதம் முதல் ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு ஒரு வாரத்தில் பெய்யும். மழையுடன் குளிரான கால நிலையும் இணைந்து கொண்டு வெப்பநிலை அடுத்த நான்கு நாட்கள் 6-8 C ஆக காணப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
03 ஏப்ரல் 2017
புலிகளை ஆதரித்துப்பேசிய வழக்கில் சிறை சென்றார் வைகோ!
தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புகளுக்கு ஆதரவாக வைகோ பேசக்கூடாது என்று வைகோவிற்கு தடையிருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசினார்.அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தார் வைகோ. தேசதுரோக வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்த வைகோ, வழக்கை விரைவாக நடத்தவில்லையெனில் கைது செய்யவும் கோரி இன்று மனு ஒன்றை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இம்மனு மீது எழும்பூர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வைகோவை சிறையிலடைக்க உத்தரவிட்டது. ஜாமீனில் செல்ல விரும்பவில்லை என கூறியதால் வைகோ கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து வைகோவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று தாமாக முன் வந்து மனுத்தாக்கல் செய்து கைதாகி புழல் சிறைக்கு சென்றுள்ளார் வைகோ.15 மார்ச் 2017
என் அம்மா ஜெயலலிதாவை சசிகலா மாடியிலிருந்து தள்ளி விட்டார்!
ஜெயலலிதாவின் மகன் நான்தான், அவரது மொத்த சொத்துகளும் எனக்குதான், என்னை உலகுக்கு அறிமுகப்படுத்த ஜெயலலிதா முற்பட்டபோது சசிகலா அவரை மாடியிலிருந்து கீழே தள்ளினார் என்று தமிழக தலைமைச் செயலாளருக்கு ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அனுப்பியுள்ளார்.ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி நீர் சத்துக் குறைபாடு, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தொண்டர்கள் அப்பல்லோ வாசலில் காத்து கிடந்தனர்.இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் திட உணவுகளை உட்கொள்கிறார் என்றும், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றும் அப்பல்லோ நிர்வாகம் தகவல் தெரிவித்து வந்தது.75 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச சிகிச்சைகள் அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.நல் ஆளுமை, பன்முகத்திறமை, திறமையான நிர்வாகம் ஆகியவற்றை கொண்ட ஜெயலலிதாவை இழந்ததால் நாட்டு மக்கள் மட்டுமல்ல அண்டைய மாநில தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி கிடந்தது. சசிகலா மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதிமுகவின் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பி.எச். பாண்டியன், ஜெயலலிதாவை அவரது வீட்டிலிருந்து யாரோ கீழே தள்ளிவிட்டதாகவும், சிபிஐ விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியே வரும் என்றும் தெரிவித்திருந்தார்.ஜெயலலிதாவின் தோழியான கீதாவும் இதேபோல் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறிவந்தார். மக்களின் சந்தேகத்தை தீர்க்க அப்பல்லோவும், எய்ம்ஸ் மருத்துவமனையும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கைகளை வெளியிட்டும் யாரும் நம்பவில்லை.ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழகமே குழப்பத்தில் உளள நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழக தலைமை செயலாளருக்கு ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.அதில், நான் தான் ஜெயலலிதாவின் மகன். அவரது உண்மையான வாரிசு நான்தான். அவரது சொத்துகள் எனக்கு மட்டுமே சொந்தம். ஜெயலலிதா இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டு 4 நாள்கள் அவருடன் போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்தேன்.இந்நிலையில் ஜெயலலிதா என்னை அவரது மகனாக இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று சசிகலாவிடம் கூறினார். ஆனால் அதற்கு சசிகலா வேண்டாம் என்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எனது அம்மா ஜெயலலிதாவை சசிகலா மாடியில் இருந்து தள்ளிவிட்டார் என்று பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். தலைமைச் செயலருக்கு வந்துள்ள இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.12 மார்ச் 2017
முன்னாள் அதிபர் சரோஜினி ஞானசோதியனின் அன்பான வேண்டுகோள்!
அன்பான மக்களே! இன்றய உலகில் மனித உயிர்களுக்கு பெறுமதி இல்லை என்ற ஒரு நிலை உருவாகிவிட்டதை நாளாந்தம் நடக்கும் விபத்துக்களில் இருந்து அறிகின்றோம் .காரணம் என்ன??ஒவ்வொரு வாகன ஓட்டிகளினதும் பொறுப்பற்ற செயல்களே !கூடுதலாக பலரிடமும் (லீசிங் ,)என்ற முறையில் அளவுக்கதிகமாக வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அரை குறை சாரதிப் பயிற்சியுடன் வாகனங்கள் ஓட்டிமற்றவர்களை தட்டுவதும் ,மதுப்பாவனை அதிகரித்து குடித்துவிட்டு ஒடுவதும் பண ஆசையில் நான் முந்தி நீமுந்திஎனப் போட்டி போட்டு ஓடுவதும் ,காப்பெற் வீதியில் வேகமாக ஓடலாம் என்ற பாணியில் இளைஞர்கள் ஓடுவதும் கூடி விட்டது .இவற்றைவிட டிப்பர் வாகனங்கள் கூடி அவற்றின் மூலமும் பலர் அடிபட்டு இறந்துள்ளனர் .அத்துடன் வீதிகளில் பொருட்களை ஏற்றி வரும் போது பழுதடைந்ததும் அப்படியே விட்டு விட்டு அதற்குப் பாதுகாப்பு விளக்குப் போடாமல் விட்டுச் சென்றதனால் ஏற்படும் விபத்துக்களும் தற்போது கூடியுள்ளது கடந்த 9-3-2017 அன்று என் அன்பு மாணவி விஜயரூபன் சர்மிளா மரணமாக வேண்டி வந்ததே டிராக்டர் ஒன்று நடு வீதியோரம் நிறுத்திவைத்திருந்தமையே அநியாய மரணம் அவரது மாமா ஒரு திறமையான சாரதி வேக்க்கட்டுப்பாட்டை மதிப்பவர் என்பதாலேயே மாமனுடன் அன்று ச்மிளா பயணித்தாள் அவளின் விதியா??இல்லை யாஎன்பது வேறு,உழவுயந்திரம் அப்படி நிறுத்தி வைக்காதிருந்தால் சர்மிளாவுக்கு இப்படி நடந்திருக்காது .தயவு செய்து வாகன ஓட்டிகளே மனித உயிர்களை பலியெடுக்காதீர்கள் .உங்கள் உயிர்களையும் மதியுங்கள் பிற உயிர்களையும் மதியுங்கள் நிதானம் பொறுமை கண்ணியம் என்பவற்றைக் கைக்கொள்ளுங்கள் சாரதிப் பணி சமூகப்பணி என எண்ணுங்கள் உங்கள் ஒருவர் கைகளிலேயே பல மனித உயிர்களின் காப்புறுதி உள்ளது "உயிர்களைக்காப்போம் விபத்துக்களைத் தவிர்ப்போம் ""எமது கோரிக்கையை பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள் .முகநூல் நண்பர்களே நீங்களும் ஒவ்வொருவரும் விழிப்பணர்வை உங்கள் மூலமாகவும் ஏற்படுத்துங்கள்.08 மார்ச் 2017
நாங்கதான் சி.எம் ; ஒரு தலையணை போதும் ; கூறினார் நடராஜன் !
ஓ.பி.எஸ் அணி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு பெற்று பேசிய அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன், சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியதாக ஒரு செய்தியை கூறி ஓ.பி.எஸ் உட்பட அனைவரையும் அதிர்ச்சியடை செய்தார்.ஜெ.வின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் ஓ.பி.எஸ் அணி எழுப்பி வருகிறது. அவரின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ அல்லது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 33 இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர்.இதில் ஓ.பி.எஸ் அணி சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போரட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதில், பொன்னையன், மதுசூதனன், பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அங்கு வந்து பேசிய அகில இந்திய மூவேந்தர் முன்னனி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 7மாதங்களுக்கு முன்பு, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை சசிகலா கணவர் நடராஜன் நடத்தினார். அப்போது சில நெருங்கிய பத்திரிக்கையாளர்களிடம் அவர் மனம் திறந்து பேசினார். இன்னும் 2 மாதங்கள் கழித்து நாங்தான் முதலமைச்சர் எனக் கூறியுள்ளார். அதுகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த செய்தியாளர், தற்போதுதான் 4 ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தல் நடத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த நடராஜன், கோடியெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனை கிடையாது. நாங்கள் நினைத்தால் சி.எம் ஆகிவிடுவோம். அதற்கு ஒரு தலையணை இருந்தால் போதும் எனக் கூறினார் என்ற அதிர்ச்சி தகவலை சேதுராமன் வெளியிட்டார்.
சேதுராமன் கூறிய செய்தி கேட்டு, ஓ.பி.எஸ் உட்பட மேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



