01 நவம்பர் 2010

யாழ்,நூலக சம்பவம் வேதனையளிக்கிறது!-ஸ்ரீரங்கா.

யாழ். பொதுநூலகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம் கவலையையும் மனவேதனையையும் அளிக்கிறது. தமிழர்களைப் பொறுத்த வரையில் இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அமைந்துள்ளது என நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு ஆசியாவிலேயே புகழ்பூத்த முதல் தரமான நூலமாக யாழ். நூலகம் கருதப்பட்டு வந்தது. இந்த நூலகம் முன்னரும் எரியூட்டப்படது. இதன் காரணமாக அரிய பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த இழப்பை எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாது.
யாழ். நூலகம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அது இன்னொரு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது வேதனை தரும் விடயம். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அதேவேளை, இந்த நூலகத்தின் பாதுகாப்புத் தொடர்பிலும் இப்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுப்பொறுப்பையும் யாழ். மாநகர சபையே ஏற்றிருக்க வேண்டும். உரிய பாதுகாப்பினை இந்த நூலகத்துக்கு வழங்கியிருந்தால் இவ்வாறான விரும்பத்தகாத சம்பவம் இடம்பெறாமல் தவிர்த்திருக்க முடியும்.
யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் பாதுகாப்புடன் வலம் வந்து கொண்டிருக்கும் போது, யாழ் நூலகத்தின் பாதுகாப்புத் தொடர்பில் அவர்கள் அக்கறை செலுத்தாமை அவர்களின் பொறுப்பற்ற செயற்பாட்டினையே காட்டுகிறது.
இவ்வாறானதொரு நிலையில் இந்தச் சம்பவத்துக்கான முழுப்பொறுப்பையும் அவர்கள் ஏற்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

1 கருத்து:

  1. ஐயா ராங்காவே இந்த முதலைக் கண்ணீர் தானே வேண்டாம் என்பது. இனவழிப்பைக் கண்முன்னே கண்ட உங்களைப் போன்ற ஓணான்கள் கொலைவெறி அரசுக்கு ஆதரவளிக்கும் போதே உங்கள் பசுத தோல் கழன்று விட்டது. வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ஏதாவது எலும்புத் துண்டங்களை பொறுக்கிக் கொள்ளப் பாருங்கள். தமிழன் என்று சொல்லவே அவமானப்பட்டு நிற்கின்றது ஈழத்தமிழ் சனம். ஏனெனில் உங்களைப் போன்ற ஓநாய்கள் தமிழனாக இருப்பதனால். இனியும் எம்மை விற்று காசு பார்க்காமல் உஙக்ள் வேலையைப் பாருங்கள். சிங்களவனைப்பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் எமக்குத் நன்றாகவே தெரியும். ஒதுங்கியிருங்கள். முதலைக் கண்ணீர் வடித்தது போதும்.

    பதிலளிநீக்கு