27 நவம்பர் 2010

மட்டக்களப்பில் ஒலித்தது மாவீரர்நாள் பாடல்!

தென்தமிழீழமான மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் மாலை வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தின பாடல்கள் ஒலித்ததால் மட்டு.நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாலை மணி 6.15 அளவில் "கார்த்திகை 27" பாடலும் "சுட்டும் விரலால் சுட்டிக்காட்டு" எனும் பாடலும் சுமார் 10 நிமிடங்கள் வரை ஒலித்தாக மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சரபவணபாவான் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
வழமையாக மட்டு.மாநகரசபை ஊழியர் ஒருவரே மாலை 6.30 மணி அளவில் வந்து வானொலி செய்திகளை ஒலிபரப்புவதாகவும் ஆனால் இன்று புலிகளின் பாடல் திடீரென ஒலித்ததை இட்டு தாம் அதிர்ச்சியடைந்தாகவும் அவர் கூறினார்.
மேலும், வழமையாக மாலை 6 மணிக்கு மணிக்கூட்டு கோபுரத்தில் வானொலியில் இடம்பெறும் பாடல்கள் ஒலிபரப்பாகுவதால் அருகில் இருந்த சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த போலீசார் அதனை பொருட்படுத்தவில்லையெனவும் அதன் பின் நகரில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினரே மாவீரர் பாடல் ஒலிபரப்பாகுவதை புதினம் பார்க்க மக்கள் கூடுவதை பார்த்து சந்தேகம் கொண்டு விசாரித்த போதே ஒலிபரப்பாகுவது புலிகளின் பாடல் என தெரியவந்ததாகவும் அதன் பின் படையினரும் பொலிஸாரும் சென்று பாடலை நிறுத்தியதோடு கடுப்பில் அருகில் இருந்த கடை உரிமையாளர்களிடம் கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாகவும் இச்சம்பவம் தொடர்பில் வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என அதிரடிப்படையினர் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மர்மநபர்களினால் ஒலிப்பரப்பட்ட இந்த பாடல்களில் புலிகளின் தலைவர் "பிரபாகரன்" அவர்களின் பெயர் இடம்பெறாமையினால் அதை அருகில் இருந்த பொலிஸார் தமிழ் தெரிந்தும் இனங்காணமுடியாமல் போனதாக கூறப்படுகிறது.
மணிக்கூட்டுக்கோபுரத்தில் ஒலிபெருக்கி பராமாரிப்பாளரை பொலிஸார் விசாரணையின் பின் விடுவித்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

1 கருத்து:

  1. வீரம் தமிழ் மண்ணில் மறையாது. மானம் அது தமிழ் தாய் எமக்களித்த பால். சிஙகள ஆக்கிரமிப்பாளனே புரிந்து கொள் எம் உணர்வுகளை. நீ அடக்க நினைத்தால் நாம் உடைத்தெறிவோம். இது எமது மேதகு தலைவர் எமக்குக் கற்றுத் தந்த பாடம். இது ஆரம்பமே. எதிரியே வருங்காலம் உனக்கு இன்னும பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றது. தமிழீழம் மலரும் வரை மறையாது எம் உணர்வுகள். மட்டு நகர் தந்த ஒரு துரொகியினால் எம்மை அழித்தாய். அதே மண்ணின் மானமுள்ள தமிழர்களினால் அத் துரோகம் துடைத்தெறியப்படுகின்றது. நன்றி உறவுகளே.

    பதிலளிநீக்கு