04 நவம்பர் 2010

யாழ்ப்பாண ஐ.நா அலுவலகத்தில் சிங்கக்கொடி!

கடந்த 15 ஆண்டுகளாக யாழ் நகரம் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ஆனால் இதுவரை காலமும் இல்லாத விதமாக அங்குள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் இம்முறை தமது நிகழ்வில் சிங்கக்கொடியை ஏற்றியதோடு, இராணுவ அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்களைக் கௌரவப்படுத்தியுள்ளது. ஐ.நா நாளை முன்னிட்டு நடந்த நிகழ்விலேயே இந்தத் திடீர் மாற்றங்களைக் கண்டுள்ள மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கு முந்தைய நிகழ்வுகளில் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் ஐ.நா கொடி மட்டுமே பறக்கவிடப்பட்டது. ஆனால் இம்முறையோ நிகழ்வு ஆரம்பிக்க முன்னர் சிங்கள அரசின் சிங்கக்கொடியை அவர்கள் பறக்கவிட்டனர்.
அதோடு இராணுவ அதிகாரிகள் பலரும் நிகழ்வுக்கு வந்து சென்றுள்ளனர். ஐ.நா இன் இத்திடீர் மாற்றமானது அவர்கள் இலங்கை அரச அதிகாரிகளுக்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் ஏற்ற விதத்தில் நடந்துகொள்ள உள்ளனர் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இதற்கு குடாநாட்டிலுள்ள பொது அமைப்புகள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றன. ஐ.நா இன் இச்செய்கை மக்களிடையே அதிர்ச்சியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஒருவரே ஐ.நா இன் அனைத்து செயற்பாடுகளிலும் தலையிட்டு வழிநடத்தி வருவதாகவும், இந்த மாற்றத்துக்கும் அவரே காரணம் என அறிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக