27 நவம்பர் 2010

தலைவர் பிறந்தநாள் மதுரையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடக் கூடாது என்று பொலிஸார் தடுத்ததால் அவர்களுக்கும் மதுரை வக்கீல்களுக்கும் இடையே கடும்வாதம் நடந்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு நேற்று 56 வது பிறந்த நாளாகும். இதையடுத்து மதுரை மாவட்ட கோர்ட் வளாகத்திற்குள் வக்கீல்கள், மனோகரன் தலைமையில் கேக் வெட்டி இனிப்புகளை வழங்கினர்.
மேலும் நீதிமன்ற வளாகத்திற்குள் கொடிகள், தோரணங்களையும் கட்டினர். இதையடுத்து உள்ளே புகுந்த பொலிஸார், இதெல்லாம் செய்யக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் அதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது கோர்ட், எங்களது இடம், இங்கு எதை செய்ய வேண்டும், கூடாது என்பதை பொலிஸார் சொல்லக் கூடாது என்று வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து மோதல் மூளும் சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறுகையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்து ஆண்டு பிரபாகரன் பிறந்தநாளை வக்கீல்கள் கொண்டாடினர். அவர்களைப் பொலிஸார் கைது செய்தனர். அதேபோல இங்கு பிறந்த நாள் கொண்டாடிய வக்கீல்களும் கைது செய்யப்படுவர் என்றனர்.
அதேவேளை, தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நீதிமன்ற வளாகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக