03 பிப்ரவரி 2011

போர் முடிந்தாலும் பிரச்சனைக்கான தீர்வு தூரத்து விடையம்!

போர்முடிந்தாலும் மகிந்த சமாதானத்தை கொண்டு வருவார் என்பது தூரத்து விடயம் என அமெரிக்கத்தூதரகம் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் போர் முடிந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறியது. இவற்றின் தாக்கங்கள் இந்திய, பாகிஸ்தான் ஊடகவியலாளர்களிடம் எவ்வாறு இருந்தது என்பதனை டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவிற்கு கேபிள் மூலம் தெரிவித்தது.
அதில் மே மாதம் 21ஆம் திகதி 2009இல் அனுப்பப்பட்ட செய்திகளின் படி, போர் பெரும்பாலும் முடிந்துவிட்டது. ஆனால் மகிந்த ராஜபக்ச­ சமாதானத்தை கொண்டு வருவார் என்பது இன்னமும் தொலைவிலேயே உள்ளது. விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டார்கள் என்றாலும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினை நியாயமானது, சட்டரீதியானது அதற்காக விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தினை முழுமையாக நியாயமானது என கூறமுடியாது. விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்ததாக அரசாங்கம் அறிவித்த பின்னர் வேறு சிலர் தம்மை தலைவராக கற்பனை செய்துகொண்டிருக்கின்றார்கள் என விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக