02 பிப்ரவரி 2011

பிரித்தானியர்கள் செய்த தவறே இன்றைய தமிழினத்தின் அவலத்திற்கு காரணம்!

இலங்கையை ஆண்ட பிரித்தானியர்கள் நாட்டை பெரும்பான்மை இனத்தவர்களிடம் ஒப்படைத்துச் சென்றமையே பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்தது - எனவே பிரச்சினைக்கான தீர்வை பிரித்தானியர்கள் சிறுபான்மை இனத்தவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டும் என யாழ்ப்பாணத்தில் செயற்படும் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான குழு கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருக்கும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளை சந்தித்து உரையாடியபோது சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.இந்தந் சந்திப்பு நேற்று காலை யாழ். ஆயரின் இல்லத்தில் நடைபெற்றது. பிரித்தானிய அரசு 1948 ஆம் ஆண்டு நாட்டை பெரும்பான்மையினரிடம் கையளித்து விட்டுச் சென்றது.. இதுவே பாரிய பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்தது.. எனவே நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தினருக்கு தீர்வை பெற்றுத் தர வேண்டிய தார்மீக பொறுப்பு பிரித்தானியர்களுக்கு உள்ளது.
தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற பேரவலங்களுக்கு பிரித்தானியர்கள் இழைத்த அந்தத் தவறே காரணம். அதை சீர் செய்யவேண்டிய கடமையும் பொறுப்பும் பிரித்தானியர்களுக்கு இருக்கின்றது . இதனை உணர்ந்து தமிழ் மக்கக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தர வேண்டும். இலங்கை அரசின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்ற பிரித்தானிய உதவ வேண்டும். அத்துடன் பிரித்தானியப் பல்கலைக் கழகம், பிரிட்டிஸ் துதரக கிளை ஆகியவற்றை யாழ். மண்ணில் திறக்கவேண்டும். இலங்கையின் மத்தியில் நடைபெறும் ஆட்சியில் தமிழர்கள் பங்கு வகிக்கும் வகையில் செயல் திட்டங்களை பிரித்தானிய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான குழுவின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக