05 பிப்ரவரி 2011

நூற்றுக்கணக்கான யுத்தக் குற்றவாளிகள் பிரித்தானியாவில் வாழ்கிறார்களாம்!

நூற்றுக் கணக்கான யுத்தக் குற்றவாளிகள் பிரித்தானியாவில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பிரித்தானியாவில் வாழ்ந்து வருவதாக பிரித்தானியாவின் கார்டின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் குற்றவாளிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள், சித்திரவதைகள், இன ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 495 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் பிரிவு பரிந்துரை செய்துள்ளது.
இதில் 20 வீதமானவர்களுக்கு மட்டுமே வீசா நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
383 பேர் இன்னமும் பிரித்தானியாவில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதில் 47 பேர் தொடர்பில் ஸ்கொட்லாண்ட்யாட் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்த வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 73 இலங்கையர்கள், 105 ஈராக்கியர்கள், 75 ஆப்கானிஸ்தானியர்கள், 39 ரூவாண்டா பிரஜைகள், 32 சிம்பாப்வே பிரஜைகள் மற்றும் 26 கொங்கோ குடியரசு பிரஜைகள் ஆகியோர் பிரித்தானியாவில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டு பிரித்தானியாவில் வாழ்ந்து வருவோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக