தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.நாளை 28ம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகளின் மனிதப் பேரவை அமர்வுகள் ஆரம்பாகவுள்ளன.
புலி ஆதரவாளர்களுக்கு இந்த அமர்வுகளில் பங்கேற்க சந்தர்ப்பம் அளிக்க வேண்டாம் என பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
அமர்வுகளில் பங்கேற்பதற்கு உத்தேசித்துள்ள புலி ஆதரவாளர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அவர்களுக்கும் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான தொடர்பு குறித்த சாட்சியங்கள் ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.
சர்வதேச புலிகள் வலையமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் இந்த அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரியுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், இவ்வாறான ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பேரவையில் உரையாற்ற சந்தர்ப்பம் அளிப்பது சட்டவிரோதமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக