19 பிப்ரவரி 2011

தமிழக மீனவர்களை கொல்ல ஸ்ரீலங்கா நியமித்துள்ள புதிய கடற்படை அதிகாரி!

தமிழக மீனவர்களை தாக்கியழிக்கும் நோக்கத்துடன் சிறீலங்கா அரசு புதிய கடற்படை அதிகாரி ஒருவரை வடபகுதிக்கு நியமித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று இன்று (19) தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக மீனவர்களை தாக்கிஅழிக்கும் நோக்கத்துடன் சிறீலங்கா அரசு புதிய கடற்படை அதிகாரி ஒருவரை அண்மையில் வடபகுதிக்கு நியமித்திருந்தது.
இந்த அதிகாரியின் உத்தரவுக்கு அமைவாகவே அண்மையில் மூன்று தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், இந்த வாரம் 136 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நடவடிக்கைக்கான உத்தரவுகளை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் உயர் மட்ட அதிகாரி ஒருவரே வழங்கியிருந்தார்.
ஆனால் தமிழக மீனவர்களை நெருக்கடிக்குள் தள்ள முனைந்த சிறீலங்கா அரசு பெரும் அவமானத்தை சந்தித்துள்ளதுடன், நெருக்கடியையும் சந்தித்துள்ளது. சிறீலங்கா மீனவர்கள் நால்வர் இந்திய கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவ் சிறீலங்கா வந்துசென்ற நிலையில் சிறீலங்கா அரசு தனது உத்திகளை மாற்றி மீனவர்களை கைது செய்துள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள 85 சிறீலங்கா மீனவர்களில் 21 மீனவர்களையும், 5 படகுகளையும் இந்தியா இன்று (19) விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக