07 பிப்ரவரி 2011

புலிகள் மீண்டும் பலத்தை காட்ட முனையலாம்!-டக்ளஸ்.

வடக்கில் புலிகள் தொடர்ந்தும் செயற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளன. வேறு அரசியல் கட்சிகளில் பின்னால் இருந்து அவர்கள் அரசியல்ரீதியாக இயங்க முடியும்.இவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொழும்பு ஆங்கில நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
செவ்வியில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
பருத்தித்துறையில் ஈ.பி.டி.பி.உறுப்பினர் கொல்லப்பட்ட சம்பவம் எதிர்பாராத ஒன்று எனக்குக் கிடைத்த தகவல்களின் படி இது அரசியல் ரீதியான உள்நோக்கம் கொண்ட ஒரு சம்பவம்.
பாதுகாப்புடன் தொடர்புடைய அதிகாரிகளிடம் இது தொடர்பாக ஏற்கனவே நான் முறையான விசாரணைகளை நடத்துமாறு கேட்டுள்ளேன். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
வடக்கில் புலிகள் தொடர்ந்தும் செயற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகளவாகவே உள்ளன. வேறு அரசியல் கட்சிகளின் பின்னால் இருந்து அவர்கள் அரசியல் ரீதியாக இயங்கமுடியும்.
ஆனால் அவர்களால் வெளிப்படையாகவோ அல்லது இராணுரீதியாகவோ இனிமேல் செயற்படமுடியாது என்று நான் உறுதியாக நம்பவில்லை. வேறு அரசியல் கட்சிகளின் ஊடாக அவர்கள் பலத்தைக் காட்டமுனையலாம்.
வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு ஊடகங்கள் என்மீது குற்றம்சாட்டின. ஆனால் அது எனது தவறல்ல. அது மொழிபெயர்ப்பினால் ஏற்பட்ட தவறு.ஒரு தொழில்நுட்பத்தவறு. இது தொடர்பாக சட்ட ஆலோசனைகளைப் பெற்றுவருகின்றோம். என்று அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக