04 பிப்ரவரி 2011

சிங்கள சுதந்திர தினத்தில் மகிந்தவின் உரை.

சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வது ஒரு பாரிய சவாலாகும். அதனை விட அச்சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாகும். இலங்கை மக்கள் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் தங்களது மனப்பாங்கினை மாற்றிக் கொள்ள வேண்டும் என சிங்கள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது சுதந்திர தின விழா உரையில் தெரிவித்தார். இம்முறை இலங்கையின் 63 ஆவது சுதந்திர விழா கதிர்காமத்தில் நடைபெறுகின்றது. இங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு மேலும் உரையாற்றிய அவர், இலங்கை மக்கள் யுத்ததின் போது தீவிரவாதத்தினை தோற்கடித்து யுத்தத்தினை வெற்றிக்கொள்ளும் போது எவ்வாறு புதிதாக சிந்தித்தார்களோ அதே போன்றதொரு மனநிலையில் தற்போது இருக்கவேண்டும். தேசிய அபிவிருத்தியை அடைவதற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் இந்த மனமாற்றம் அவசியம். சுதந்திரத்தினை பெறுவதினை விட அதனை தக்கவைத்துக் கொள்வது பாரிய சவாலெனவும் அவர் அங்கு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக