அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவளிப்பதோ அல்லது ஆளுங்கட்சியுடன் தான் சேர்ந்து கொள்ளப் போவதோ நடக்காத காரியங்கள் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர்; இயக்கத் தலைவரான சீமான் இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி ஊடாக வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் இலங்கையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணையவுள்ளமை தொடர்பில் பரவலாகப் பேசப்பட்டு வருவது குறித்து சீமான், சிவாஜிலிங்கத்திடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸை ஆதரிப்பதோ அல்லது அரசாங்கத்துடன் இணைவதோ என்பது நடக்காத காரியம். அவ்வாறான எண்ணம் இருந்திருந்தால் அதனை எப்போதோ நிறைவேற்றியிருக்க முடியும்.
அண்மைக் காலமாக என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் இவ்வாறான போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு எனது அரசியல் வாழ்க்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தி, தமிழ் மக்களிடமிருந்து என்னை பிரிக்கச் முயற்சிக்கின்றனர். ஆனால், என்னைக் குறி வைத்த அவர்களின் எந்தப் போலிப் பிரசாரங்களும் தமிழ் மக்களிடம் எடுபடாது. நான் என்றும் தமிழ் மக்களுக்காகவே பாடுபடுவேன் என சிவாஜிலிங்கம் சீமானிடம் தெரிவித்தார் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக